மனித வாழ்க்கை

உயிர் ஒன்று பிறக்கும் நொடியிலே
துடிக்க தொடங்குகிறது மரண
கடிகாரம் பூஜ்ஜியத்திலிருந்து...
மனிதன் வாழ்க்கையோ
இரண்டு பக்கங்களே
இதனிடையே எத்தனை
எத்தனை மாற்றங்கள்...
பிறந்தோம்,
வளர்ந்தோம்,
உழைத்தோம்,
வாழ்ந்தோம்,
இறந்தோம்,
மனித வாழ்க்கை ஒரு விசித்திர
பயணமே விழி கண்ட வழியில்
நற்குணம் என்பது சக்கரம்
ஒழுக்கம் என்பது அச்சாணி
கழண்டால் உருளுவாய்
மண்மேலே கவணமாய்
காத்திடு மனிதா...
நேற்றைய கடந்த கால
நினைவுகளிலும்
நாளை நடக்கும்
எதிர்பார்ப்புகளிலும்
மனிதன் வீணான
கற்பணைகளிலே
நேரங்களையெல்லாம்
செலவிட்டு...
இன்றைய நிகழ்காலங்களை
இழந்து விடுகின்றான்...
வயோதிபம் அடைந்தால் தான்
இளமைக் காலகட்டங்கள்
தவறுகளே என
தோன்றும்...
பேசும் போதெல்லாம்
அறிவுரைகள் முளைக்கும்
தத்துவங்கள் தெரிக்கும்...
இறைவன் எழுதிய
மனிதனின் வாழ்க்கைப்
புத்தகத்தின்...
"முன்னுரையாய் பிறப்பும்
முடிவுரையாய் இறப்பும்"
"அனைத்து உயிர்க்கும்"