சுமை



எனக்கு
நன்கு பரிச்சயப்பட்ட
நீர்க்குடம்
எப்போதும்
என்னுடன் ஒட்டிக்கொண்டபடி

நடக்கையில் நிற்கையில்
அமருகையில் என்று
என் அனைத்து அசைவுகளோடும்
நிறைந்திருக்கிறது
அதன் முழுப் பங்களிப்பு
பலநேரம்
உறக்கத்தில்கூட
அதன் அண்மையை
உணர்கிறேன்
எனக்கே விதிக்கப்பட்டதாய்
எந்தச் சூழலிலும் மறுதலிக்கின்றன
உனது கரங்கள்

உனக்கும் சேர்த்துச் சுமக்கிறேன்
கனத்தின் கடுமையோடு.
ஒரு இளம் காலைப் பொழுதில்
அதை யாரும் அறியாமல்
உடைத்தெறிகிறேன்.
என் இடுப்பில்
வெகு கனமான குடம்
வேறொரு வடிவத்தில்........

எழுதியவர் : ராஜி கருணாகரன் (18-Feb-11, 9:18 pm)
Tanglish : sumai
பார்வை : 414

மேலே