அட்டகாசமான 100 சிரிப்புகள்
21.என் பையன் வெடியா கொளுத்திக் காசைக் கரியாக்கறhன் *
நீங்க என்ன பண்ணறீங்க.. ?
கசாப்புக்கடை வெச்சிருக்கேன் *
அப்ப நீங்க கறியைக் காசாக்கறீங்க * _______________________________________________________
22.பட்டாசுக்கடையிலே கோழி புகுந்துட்டதுக்கு இப்படிப் பதர்றியே.. ?
புகுந்தது நெருப்புக் கோழியாச்சே *
_______________________________________________________
23.தீபாவளிக்கு வந்த உங்க மாப்பிள்ளை மாடியை விட்டு இறங்காம அப்பப்ப காஸெட் கொடுத்துவிடறhரே. .. என்னவாம்.. .?
வைரமோதிரம் போடணும்ங்கற கோரிக்கையை நிறைவேத்தினாதான் கங்கா ஸ்நானம் பண்ணக் கீழே இறங்குவாராம் *
_______________________________________________________
24.என்ன.. . போலீஸ் ஸ்டேஷனுக்கு ஏகப்பட்ட nஜhடிங்க பெட்டி படுக்கையோட வந்திருக்காங்க ?
எல்லோரும் நம்ம ஸ்டேஷன்ல லவ்மேரேஜ; பண்ணிக்கிட்டவங்க. தலை தீபாவளிக்கு வந்திருக்காங்க *
_______________________________________________________
25.எதுக்கு சார் உங்க வீட்ல பட்டாசு வெடிக்க என்னைக் கூப்பிடறீங்க ?
ஆபீஸ்ல நீங்க நிறைய பேரோட வேலைக்கு வேட்டு வெச்சிருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். அதனாலதான் *