வருவாயா

ஐம்புலன் வேலியிட்டு
எவரும் உட்புக முடியா
இருள் காடாய்
புதர் மண்டிக்கிடந்த
என் அடர்வனம் நடுவே
ஒரு நாடோடியின்
சாரங்கி இசையென
என்னால் எத்தகையதென
அறியப்படாமலே
உள்வாங்கப்பட்டு
ஒரு மென் ஊசியென
உள்நுழைந்து
நூலிழை பிரித்து
நெய்து கொண்டிருக்கிறாய்
என்னை !

வெளிச் சொல்லமுடியாத
பன் முகப் பரிமாணங்களின்
மாயப் படிமமாய்
காட்டுக் கொடியென
எனைச் சுற்றி
பின்னிப் பிணைந்து
என் பெரு மரம் பிளந்து
கொல்நஞ்சு செலுத்தி
அக்னிப் பொட்டலத்தை
சிறை வைத்துச் சென்று விட்டாய் -
வெந்து தனியாததென் காடு
பெரும் ஜூவாலையுடன்
கொளுந்திட்டு எரிகிறது !

நீயணைக்க வருவாயா ?
தீயணைக்க ?

எழுதியவர் : பாலா (18-Mar-14, 7:13 pm)
Tanglish : varuvaayaa
பார்வை : 168

மேலே