18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற 25 மார்ச் கடைசி தேதி

18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற 25 மார்ச் கடைசி தேதி :

18 வயது நிரம்பியவர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க மேலும் வரும் 25 மார்ச் வரை கால நீட்டிப்பு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் அவர்தம் தொகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலகங்கள் அதாவது வருவாய் துறை அலுவலகங்களில் இயங்கும் தேர்தல் பிரிவிற்கு நேரடியாக சென்று விலாச சான்று மற்றும் அடையாள சான்றை கொடுத்ததும் தனது பாஸ்போர்ட் புகைப்படத்தை இணைத்தும் படிவம் 6 (FORM 6
[See rules 13(1) and 26] பூர்த்தி செய்து கொடுத்தால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்கும். படிவம் ஏற்றுகொள்ளபட்டவுடன், உடனே ஒப்புதல் சான்று வழங்கப்படும் அதன் பின்னால் இருக்கும் 10 இலக்க குறியீட்டு எண்ணை வைத்து ஆன்லைன் மூலமாக சுலபமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளலாம்.

எழுதியவர் : வீ .ஆர் .சதிஷ்குமரன்.சிட்ல (19-Mar-14, 9:56 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 120

மேலே