மௌனம் என்னும் கட்டற்ற வெளியின் தாழ்ப்பாள்
எதிர்பாரா தருணத்தில்
இடர் வந்து
கதவைத்தட்டும்,
ஒருபோதும் இல்லாது
புதிர் ஒன்று
கனவை முட்டும்
நினையாத நிலையொன்று
மனதைக்கிள்ளும்
வடியாத இரவொன்று
துயரில் தள்ளும்
வயிர் என்னும்
துயர் வூற்றில்
பசி வந்து
கொடி ஏற்றும்
தடுமாறும் உளத்தோடும்
தருமம்தான் உனைபோற்ற
பசி வந்த சிறுநாயை
உன் கண்ணே
உடன்காட்டும்.
திங்கள் பத்து
தங்க
கருவறைக்கூடு தந்த
தாய் வந்து
காது கடிப்பாள்
மூன்றாம் காலாய்
நடை வண்டிப்பருவத்தில்
நடந்தே வந்த
தந்தை வந்து
மருந்து கேட்பார்
பால்யவயதுமுதல்
ஓடித்திரிந்த தங்கை
பருவம் எய்துநின்று
திருமணச் சடங்கில் நிற்பாள்
திசை எட்டும்
நெறுடல் வாள்
வந்து வீசும்
பார் அங்கே
உள்ளுக்குள்
மௌனம் என்னும்
வானம்...
அந்த கட்டற்ற வெளியின்
தாழ்ப்பாளை திற!
அமைதிகொள்...
மீண்டும் தேடு
உன் கனவுப்பாதையின்
சூரிய விளிம்பை...