மங்காத மலரும் நினைவுகள்

திரும்பிப்பார்க்கிறேன் துள்ளல்
ஆட்டம்போட்டு கூடித்திரிந்ததை
ஆண் பெண்ணென்ற பேதமின்றி
உள்ளோன்றுவைத்து புறம்பேசா
சண்டைகளும் சமாதானமும்,,,

கோபமில்லை காம தாகமில்லை
தாய் பிள்ளையென தரம்பிரித்து
இலைகளைகிள்ளி கடைவிரித்து
மண்ணை சமைத்து தாடையில்
ஊட்டி உண்டதை என்றும் மறவேன்

கண்ணாமூச்சி ஆட்டமும் கபடி
போட்டியும் கோலிக்குண்டு சிட்டியும்
மரமேறி கிளைதாவி கால்தவறி
கீழேவிழ கையோடித்த நாட்களும்
எண்ண காட்சியிலின்னும் மறையாதே

தத்தம் வீட்டிலிருந்து அரிசி பருப்பு
உப்பு புளியோடு மிளகாய் எல்லாம்
எடுத்துவந்து சமைக்க தெரியாவயதில்
கருவக்காட்டுக்குள் பனைமட்டையில்
கூட்டாசோறு சமைத்து மகிழ்ச்சியாய்
சமத்துவ பந்தியிட்டு விருந்தோம்பல்,,,,,

பாசம் பிடித்து பார்வைக்கு மறைவாய்
மனது சுமந்துனின்ற பசுமை நினைவை
தூசுதட்டி படிந்துள்ள துருக்கள் களைந்து
கால ஓடங்களை தடையிட்டு நிறுத்தி
மீண்டும் விதைத்திட்ட கவிதை வயலே

நடக்கா ஓன்று நடப்பதாய் நினைத்து
என் கற்பனையில் கடவுள் காட்சிதந்து
வேண்டியதைகேள் தருகிறேனென்றால்
கண்ணிமைக்கும் நேரத்தில் கணமேனும்
தாமதிக்கா சத்தமேகேட்பேன் கடவுளிடம்

என்றும் வஞ்சமில்ல பிள்ளமனமும்
தள்ளிவைக்கா அந்த நல்ல குணமும்
சஞ்சலமில்லாத பாலினம் பிரிக்காத
பட்டாம்பூச்சியாய் நான் பாடித்திரிந்த
பருவமே பரிசாய் வேண்டுமென்று,,,,

உங்களோடு நானும் பசுமை நினைவுகளோடு ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன் ......

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன் . (21-Mar-14, 4:29 pm)
பார்வை : 232

மேலே