பள்ளிக்கூட பாசம்

ஒன்னாப்பு படிக்கையில
அஞ்சு பைசாக்கு
ஆரஞ்சு முட்டாய் வாங்கி
ஆறு பேரு
பங்கு வச்சி தின்னோம்...
ரெண்டாப்பு படிக்கையில
அம்பது பைசா
அழி ரப்பர
நாலுபேரு
பிரிச்சிவச்சிகிட்டோம்...
மூனாப்பு படிக்கையில
ஒரு ரூவா
பென்சில
மூணுபேரு
ஒடிச்சி வச்சிகிட்டோம்...
நாலாப்பு படிக்கையில
ஒன்னாருவா ஸ்கேல
ரெண்டுபேரு
ஒடிச்சி வச்சிகிட்டோம்..
அஞ்சாப்பு படிக்கையில
பேனா மைய
பெஞ்சில தொழிச்சி
மாத்தி மாத்தி
ஒதவிக்கிட்டோம்...
பங்கு வச்சதுக்கும்
பங்கம் வந்து,
ஒதவின்னு போய்
ஓரளவு பிரிஞ்சி,
ஆறாப்ல பள்ளிகுடம்
மாறிப்போனதுமில்லாம
பாசமும் மாறித்தான் போனது...

எழுதியவர் : சுபா பூமணி (21-Mar-14, 5:55 pm)
பார்வை : 104

மேலே