சொர்க்கம் எங்கே தொடர் அத்தியாயம் ஒன்று
சொர்க்கம் எங்கே .. தொடர்
அத்தியாயம் .. ஒன்று
என்றும் போல் அன்றும் படுக்கையில் அமர்ந்து மடிக்கணினியை எடுத்து வைத்து முகநூல் உள்ளே புகுந்து நண்பர்கள் பலரும் என்னென்ன போஸ்ட் செய்திருக்கிறார்கள் என்று ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்பொழுது .. யாரோ இருவர் அருகில் வந்து நிற்பது போல் தோன்றியது.
வீட்டில் நான் மட்டும் தான் இருந்தேன். என் மனைவியும் அவள் அம்மாவும் அருகில் இருக்கும் ஆலயத்திற்கு வழிபடச் சென்றிருந்தார்கள்.
அந்த ஆலயம் சிறியது தான் என்றாலும் பல கடவுளை பிரதிஷ்டை செய்திருந்தார்கள்.
ஸ்ரீ ராமன்-சீதா-இலக்குமணன் சமேதம் அனுமான் இவர்களுக்கு ஒரு சிறிய கோயிலும், மற்றும் குருவாயூரப்பன், ஐயப்பன், மஹாலக்ஷ்மி, ஆறுமுகன் சுப்ரமண்யன், நவகிரகங்கள் இவர்களுடன், பிரதான பீடத்தில் சித்தி விநாயகனும் உள்ளனர்.
அந்த கோயிலுக்குச் சென்றுவந்தால் பல தெய்வங்களின் அருள் ஒருங்கே கிடைக்கும்.
வீட்டின் வாயிற்கதவு உள்ளிருந்து தாழிடப்பட்டிருந்தது. எனவே நான் அறியாமல் எவரும் வீட்டின் உள்ளே புகுந்து விட முடியாது.
இருப்பினும் இருவர் உள்ளே இருப்பது போல் ஏன் தோன்றியது.
“ச்சே .. ச்சே” இது வெறும் பிரம்மையாக இருக்கும்.
அஞ்சாதே மனமே என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது, மதிப்பிற்குரிய மணி சார் அவர்களின் ஆத்மா பற்றிய போஸ்ட் ஒன்று கண்ணில் தெரிந்தது.
மணி சாரின் போஸ்ட்கள் எல்லாமே செயலற்று இருக்கும் மனிதர்களின் சிந்தனையைத் தூண்டி எழுப்பி நம்மை வேறு உலகத்திற்கு கொண்டுசெல்லும் சக்தியுடையவையாக இருக்கும்.
= வளரும் =