வேண்டுகிறேன் மழையே

நான் வரைந்த கவியதனின்
நலினமதை கண்டு
இருமான்களதில் நடைபயில கண்டு
கூவுகின்ற குயிலோ இலை
பனி தூங்கிடும் துயிலோ

ஆறா மனதை ஆற்றிடத்தான்
கவி படைத்தேன் தினமும்
ஆறாத ரணமாய் மாறியதோ
நானறியேன் ...

கூடுகின்ற சபைதனில்
ஆடுகின்ற நாட்டியமோ
வாட்டுகின்ற மேனியதை
கூட்டுகின்ற சூதாட்டமோ
நானறியேன்....

பாவையர்க்கும் பண்ணிசைத்தேன்
பூவயர்க்கும் புன்முறுவல்
தோன்றிட தினம் படைத்தேன்
வளர்ந்து வரும் சமுதாயத்தின்
வாட்டம் கண்டு மனம் வெடித்தேன்!!

பார்வைக்கு முரடன் நான்!
பலா சுளை போல்தான் நானும்
உரித்து தர தெரியாமல்
விழி பிதுங்கி மதி மங்கி
உசிதம் அறியாது நான்...!

என்மனம் வாடுகின்ற
வாட்டம் கண்டு வந்து விடு
என் வான் மலரே !

எழுதியவர் : கனகரத்தினம் (21-Mar-14, 11:21 pm)
பார்வை : 142

மேலே