மூன்று வீடு போதும்
ஆயிரம் ஆயிரம் நாங்கள் பாத்தாச்சு...
உழைப்போம் என்று குழைத்தவர்களை
உயிர்விடும் அளவுக்கு குரைத்தவர்களை
அவ்வளவும் காற்றில் கலந்த பேச்சாச்சு...
நாட்டுக்கும் உழைக்க வேண்டாம்
ஊருக்கும் உழைக்க வேண்டாம்
உருப்படியாய் ஒரு காரியம்
சொல்லுகிறேன் கேளுங்கள்!
நூறு வீட்டுத் தெருவிலே
பத்து வீடு அரசியல்வாதி
பத்து வீடு லட்சாதிபதி
மிச்சமுள்ள எண்பது வீட்டிலே
அதிகபட்சம் அறுபதிலே அவஸ்தை
இருபது வீட்டுக்காரனும் சேர்ந்து
மூன்றே மூன்று வீட்டை
தத்தெடுக்க சொல்லவில்லை
வேலைக்கும், படிப்பத்தற்கும்
வழி செய்தால் போதும்
அதெப்படி முடியும் என்று
மூக்காலே நீ அழுதால்....
மூன்று வீட்டை காப்பாற்ற
முடியாத உனக்கு
மூன்று வருடம் ஐந்து வருடம்
ஆட்சி என்பதெதற்க்கு?
கட்டையில போன பின்னே
எரிக்கின்ற நெருப்பிற்கும்
அரிக்கின்ற புழுவிற்கும்
லஞ்சமாக குடுப்பதற்கா
லட்சாதிபதி உந்தன்
லட்சமெல்லாம் சொல் பதிலை!