இயன்ற வரை இல்லை என்று சொல்லாதிர்கள்

கையேந்தி நிற்கிறது
ஒரு குழந்தை - பண
கட்டிலில் புரளுது மற்றொன்று !

வயிற்று பசி தீர்க்க வழியில்லை
வல்லரசாக்க நினைக்கிறோம்
வெட்கமாக இல்லை

சுதந்திரம் வாங்கியும்
அடிமைத்தனம் ஓயவில்லை

முல்லைக்கு தேர் கொடுக்க வேண்டாம்
முல்லைத்தீவுக்கு போராட வேண்டாம்
ஊழலை எதிர்க்க வேண்டாம்
உண்மையை ரசிக்க வேண்டாம்

பட்டினியால் வாடும் பாமரனுக்கு
பத்து ரூபாய் கொடுத்தால் போதும்
பாவம் அவன் உயிர் இன்னும்
பத்து நாள் வாழும் இந்த
பாழாய் போன உலகத்தில் !
அடுத்தவர் பசியில் பணம் பார்க்காதீர்கள்
பின்னாளில் உங்கள் பசிக்கு
பணத்தை உண்ண முடியாது... ...sMs...

எழுதியவர் : ... (27-Mar-14, 9:07 am)
பார்வை : 56

மேலே