சிறுவர்க்கு ஓர் கவிதை

சிறுவர்க்கு ஓர் கவிதை
---------------------------------

பறவையைப் பார்த்து கத்துக்கோ

அதி காலையில் எழுந்திட பழகிக்கோ

பல் விளக்கி சுத்த செய்துக்கோ

பின் இறைவன் நாமம் மனதில் எற்றிகோ

இந்த வேளையில் பாடம் படித்திடு

படித்தவை மனதில் படிந்திடும்


சுற்றுபுறம் சுற்றி வந்திடு

குருவிக்கு கொஞ்சம் நெல் இட்டிடு

சுற்றுபுற தூய்மை எண்ணிடு

உன்னால் முடிந்ததை அதற்கு செய்திடு


சுத்த காற்றும் நீரும் தேவை வாழ்விற்கு

இதை என்றும் கருத்தினில் வைத்திடு

"சுத்தம் சோறு போடும்"தமிழ் வாக்கு

இதில் பல உண்மை இருக்கு எண்ணிப்பாரு


பொய் எப்போதும் உரைக்கல் ஆகாது

மெய்தான் உள்ளத்தை கோவிலாக்கும்

அது அந்த தேவன் வசிக்கும் கோவிலாகும்


ஆணவம் அகந்தை நம்மை அழித்துவிடும்

அவற்றை எடுத்தெறிந்து வாழ கற்றிடு

நல்ல தொழில் ஒன்றைக் கற்றிடு

அதை சீராய் செய்து வாழ்ந்திடு

"செய்யும் தொழிலே தெய்வம் "

இது நம் முன்னோர் உறைத்த சத்திய -

மொழி


நல்ல குடிமகனாய் வாழ்ந்திடு

நாட்டைக் காக்க முன் வந்து நின்றிடு

தாய்த் தந்தையரை நித்தியம்- வணங்கிடு

மூப்பில் அவரைக் கண்போல் காத்திடு

ஆசானை தெய்வம் போல் மதித்திரு

அவர் ஆசியில் நன்றாய் வாழ்ந்திடு

நம் மொழி என்றும் சிறந்த மொழி

அதில் பேசி எழுத என்றும் தயங்காதே

இந்த வாசவன் சொல்லும் இந்த மொழி

உன்னை என்றும் நல்லவனாக்கும் மொழி

எழுதியவர் : வாசவன் (27-Mar-14, 11:44 am)
பார்வை : 304

மேலே