குறி 6
வெப்பச் சலன மழையின் ஈரம்
காற்றாலை விசிறியின்
கோரப்பசிக்கு இறை?!....இதனாலோ
நிலத்தடி நீர் மட்டக் குறை?!....
விலையில்லா அரிசி வாங்கி சாப்பிட்ட
விவசாயியின் தோட்டத்தில்
விளைந்த தக்காளிக்கு
விலையில்லாமல் போனது?!...
எப்படி வரும் சுனாமி
நியூட்ரினோ ஆய்வு மையத்தைத் தாண்டி?!....
ஓசோன் ஓட்டையை
ஓரளவேனும் வேய
பச்சை மரங்களை
பிச்சை எடுத்தேனும் நடனும்?!....
மாயமானது விமானம் -முகத்தில்
கறியை பூசியது விஞ்ஞானம்?!....
வரிப்பணம் என்பது
ஏழை விவசாயியின்
உள்ளங்கால் வெடிப்போ?!....
இழவு வீட்டு வாய்க்கரிசியும்
திருமண வீட்டு வாழ்த்து அரிசியும்
விலையில்லா அரிசியோ?!....