என் கண்ணீரில் அவாழும் மீன்கள் 555
என்னவளே[னே]...
என்னவள்[ன்] நீ என்று
என்னில் ஆசை வளர்த்தேன்...
என் உள்ளத்தில்
உன்னை வைத்தேன்...
உன்னை காண
ஒற்றை அடி பாதையிலே
ஓடி வந்தேன்...
பாதம் தைத்த முட்களின்
வலைகள் கூட சுகமாக தானடி[டா]...
வார்த்தை முட்களை
ஒன்றாய் தொடுத்தாய்...
என் மீது ஆசை
இல்லை என்று...
உள்ளத்தில் தைத்த
முள்ளாய் வலிக்குதடி[டா]...
விலகி நான்
சென்றபோதும்...
என்னை சுற்றியே
வந்தாயே...
என்னை விட்டு
விலகி செல்லவா...
நீ இல்லா இந்த வாழ்கை
மரித்துவிட என்னுதடி[டா]...
என் பெற்றோரின்
கஷ்டங்கள்...
என் கண் முன்னாள்
நிற்குதடி[டா]...
தூண்டிலில் சிக்கிய
மீனாய் துடிக்கிறேன்...
கண்ணீரில் தண்ணீரில்
அழும் மீனை போல...
மண்ணில் வாழ
ஆசை இல்லை...
என் உடலை மண்ணில்
புதைக்கவும் வழி இல்லை...
ஒற்றை பனைமரம்
கட்டுமரமாகுமா...
நான் மட்டும் வாழும் வாழ்க்கை
வாழ்க்கையாகுமா...
என்னவளே[னே] உணர்ந்து
கொள்ளடி[டா] என்னை...
விலகியே நின்ற என்னை
நீ விட்டிருக்கலாம்...
என்னில் ஆசை வளர்த்து
விலகி நிற்பது ஏனடி[டா]...
என்னவளே[னே] உணர்வாயா
உன் தவறினை.....