ஒரு இனிய விடியல்
சருகுகளுக்கு வண்ணம் கொடுங்கள்
சந்தோசப் பூக்கள் பாதையில் மலரும்
சத்தியமாய் நம் நினைவுகள் பயணங்கள்
சந்தோசமாய் இனி வாழ்க்கையை அமையுங்கள்...!!
விழுந்த தருணங்கள் எழுவதற்கான பாடங்கள்
விழித்து இனி எழுவோம் விடியலே வேதங்கள்
விரைந்து தெளிவு வந்தால் விடியல் மனசில் வரும்
விடியல் என்பது விழிகளில் மட்டும் தெரிவதல்ல...!!
சிந்தனைப் பறவை அங்கே சிறகடிக்காது பறக்கும்
சிறப்புறவே தென்றலும் இதயத்திலே வீசும்
ச்.....சீ.....என்று ஒதுக்கிவிட எதுவுமே இல்லை- பனிச்
சிகரத்தில் சிரிக்கும் பல்வரிசை கண்டு மகிழலாம்..!!