சாதிகளெனும் சாக்கடை

சாதிக ளித்தனை
சாக்கடை யென்று - இதுவரை
என்மனம் உணர்ந்ததில்லை...!

பாதியில் வந்த
சாதியினாலே நாம் – அடைந்தது
இதுவரை எதுவுமில்லை...!

ஆதியிலிருந்து அனைவரும்நாம்
அன்னையின்மைந்தர்கள் ஐயமில்லை – இயற்கை
அன்னையின்மைந்தர்கள் ஐயமில்லை...!

சாதியின்சாரம் அறிந்துகொண்டேனின்று
சமத்துவநெறியில் தெளிந்துவிட்டேன் – சாதி
கலந்திட்ட ஓடையானநான்...!

இனி வேண்டாம்
எனக்கிந்த சாதிபேதம் – தொழுவேன்நாளும்
பெரியாரின் பாதம்...!

எட்டிவைப்போம் சாதியை
விட்டுவைப்போம் சமத்துவத்தை – நம்
எதிர்காலத் தலைமுறைக்கு...!
-இரா.வீரா

எழுதியவர் : இரா.வீரா (30-Mar-14, 10:28 pm)
பார்வை : 305

மேலே