முட்டாள்கள் தின நல்வாழ்த்துக்கள்
இணைய உறவுகள் அனைவருக்கும்
இனிய “முட்டாள்கள் தின” நல்வாழ்த்துக்கள்
*
மனிதப் பிறவியில் எவரும்
அறிவாளிகள்,முட்டாள்கள் என்று
எவரும் இல்லை. எல்லாமே
சுரப்பிகளின் விளையாட்டுக்கள்.
அவர்களை முட்டாள்கள் என்று
எந்த முட்டாள்கள் சொன்னது?
முட்டாள்கள் முட்டாள்களாகவே
இருப்பார்களா என்ன?
முட்டாள்கள் முட்டாள்களாகவே
இருப்பதில்லை என்றும்
முட்டாள்கள் என்பவர்கள்
அறிவாளிகள் இல்லையா?
அறிவாளிகள் முட்டாள்களாக
இருப்பதில்லையா?
ஏதேனு மொரு கருத்தை
உள்வாங்கிக் கொண்டு
அறிவாளிகளைக் கூட
முட்டாள்களாக்கி விடுகிறார்கள்
முட்டாள்கள்.
முட்டாள்கள் தினத்தை
உலகிற்கு அறிமுகப் படுத்தி
முட்டாள்களைப் பெருமைப் படுத்திய
முட்டாள் அறிஞரைப் போற்றுவோம்…!!