சிறுவர் புத்தகம் எழுதுங்கள் சிறுவர் பாடல்

சிறுவர் புத்தகம் எழுதுங்கள்…!!{ சிறுவர் பாடல் }

*
சின்னச் சின்னக் குழந்தைகள்
சிரித்து சிரித்துப் படிக்கணும்
சிந்தனைக்கு விருந்தாகும்
சித்திரப் புத்தகம் எழுதுங்கள்
*
குடும்ப உறவை வளர்த்திடும்
பண்பு நெறிகள் பழகணும்
மனஇயல்பைப் பேணிடும்
உளவியல் புத்தகம் எழுதுங்கள்.
*
அறிவியல் தகவல் தொழில்நுட்பம்
கணினிக் கல்விக் கற்கணும்
சிலிர்க்க வைக்கும் சாதனைகள்
விளக்கும் புத்தகம் எழுதுங்கள்
*
அறிவை மெல்ல தூண்டிடும்
விளையாட்டுக் கல்விப் படிக்கணும்
ஆடிப்பாடிக் களி்க்க வைக்கும்
மன வளர்ச்சிப் புத்தகம் எழுதுங்கள்
*
கவிதை, கதை,நாவல், இலக்கியம்
தேடித் தேடிப் படிக்கணும், புதிய
கற்பனைவளம் ஊக்கப் படுத்தும்
சிறந்த சிறுவர் புத்தகம் எழுதுங்கள்
*
குழந்தைகளின் வளர்ப்பிலே
நல்ல கவனம் செலுத்துங்கள்
சர்வதேசக் குழந்தைகளைப்
புத்தகத் தினத்தில் வாழ்த்துவோம்…!!
*
.

எழுதியவர் : ந.க.துறைவன் (2-Apr-14, 7:44 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 105

மேலே