காதலின் உருவாக்கம் உயிரில் 555

தோழனே...
தோழியே...

காதல் தென்றல்
நம்மை தழுவது போல...

தழுவுவதால்
வருவதுமல்ல...


நெருபென்று
விலகி நின்றால்...

அனல் நம்மை
தொடாமலும் இல்லை...

தவிர்த்தலால் வராமல்
இருப்பதுமல்ல...

தேனோடு மலரும்
பூக்களை போல...

கனவினில் கலந்து
மனதினில் நினைத்து...

ஒருநாள் பூக்களை போல்
வாடி விடுவதுமில்லை...

மரணத்தில்
விழுவதுமல்ல...

அழகாலும் அறிவாலும்
அமைக்கப்படுவதுமல்ல...

உண்மைகாதல்...

கடல் அலைகளை போல
அது அழிக்கப்படுவதுமல்ல...

மொட்டுவிட்ட மலர் மலர
காத்திருக்கும் பருவம் போல...

விழி என்னும்
விதையால்...

பார்வை என்னும்
பாசத்தால்...

இதயம் என்னும் இடத்தில்
வளர்வதுதான் காதல்...

கண்களில் தொடங்கி
மரணம் தழுவினாலும்...

வாழும் நினைவுகள்தான்
உண்மை காதல்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Apr-14, 4:21 pm)
பார்வை : 1611

மேலே