திசைக் காட்டும் கருவி

தளமெனும் கடலினிலே
எழுத்தான கப்பலிலே
பயணிகள் மகிழ்ச்சியிலே!

பாடிக் கொண்டு பலர்
சிரித்துக் கொண்டு சிலர்
கதைப் பேசி பலர்
அதை ரசித்துச் சிலர்!

கூடிக்கொண்டு பலர்
கருத்தாக பேசிக் கொண்டு சிலர்!
ஐயத்தைக் கேட்டுக் கொண்டு பலர்
அதனைப் போக்கிக்கொண்டு சிலர்!
விளையாட்டிலே சிலர்!
விவாதத்திலே சிலர்!

விவகாரமாய் சிலர்
வீண் குறும்பில் சிலர்!
அப்படியும் இப்படியுமாய்
அமர்க்களமான கப்பலுக்கு
உலகம் சுற்றி வரும்
அட்டகாச கப்பலுக்கு
குழுவான மாலுமி சிலர்!

வழி தவறா வலம் வரவே
திசைக் காட்டும் கருவியாய்
சிலரே சிலர்!
அதில் ஒன்று மட்டும் இன்று
வேலை நிறுத்தம் செய்ய எண்ணி
போராடுவதும் ஏனோ?

திசை மாறி வழி மாறி
கொள்ளையரின் வசமாகி
போகட்டும் என்றா?

திசை மாறி வழி மாறி
பெரும் பாறை முன் பட்டு
பிளக்கட்டும் என்றா?

திசை மாறி வழி மாறி
பெர்முடா முக்கோணத்தில்
சிக்கட்டும் என்றா?

திசை மாறி வழி மாறி
பகைமீன்கள் இடம் சென்று
கவிழட்டும் என்றா?

என் தோழக் கருவியே
ஓயாதே ஒரு நாளும்!

சூறாவளிக் காற்றாய்
எதிரிகள் சூழ்ந்தாலும்
உன் சுழலில் மாறாதே!
இமயமான போர்க்குணத்தை
ஒருபோதும் குறைக்காதே!

ஓயாதே ஒரு நாளும்!
என் தோழக் கருவியே!

எழுதியவர் : உமர் ஷெரிப் (5-Apr-14, 10:57 am)
பார்வை : 204

மேலே