யார் இவள்

இடிகளின் நெருக்கடியில் இடப்பெயர்ச்சி
செய்த மின்னல் தாரகையோ???
நிலவின் பிரதி பிம்பத்தில் சூழ்கொண்ட
செங்காந்தள் மலரின் கிள்ளை குமரியோ???
சந்தன தென்றலின் காதல் சமிக்கையில்
சன்னல் திறந்த சரகந்தி பூதானோ???
எடிசனை தோற்கடிக்க மண்ணில் வந்து
மல்லுகட்டும் மின்சார தேவதையோ??
இலக்கியம் வர்னித்த இந்திர சபை
திசை மாறி வந்து விட்டதோ???
இல்லை என் கண்விழி கார்னியாவுக்குள்
கம்பன் புகுந்து விட்டானோ??
மந்தகாச புன்னகையில் மக்கிபோய் உரமாகும்
என் உணர்வுகற்றைகளுக்கு சவுக்கடி கொடுக்கும்
அவள் அக்கினி பார்வையில் ஆயிரம்!
ஆயிரம்!! மதுரைகள் வீழ்ந்திடும் போலவே !!!???
பிரபஞ்ச பள்ளத்தில் பித்து பிடித்துப்போன
பாதைகளில் பற்கள் பாதிக்கும் தொல்லுயிர்
எச்ச கூட்டத்தில் துள்ளித் திரியும்
இயற்கை எழிலின் இளங்குமரியோ???
மையல் விழி மயக்கம் தந்து
மெல்லிசை மெட்டுப் போடும் இவள்
கலைமகளின் கடைசி வாரிசோ???
பறந்து திரியும் புள்ளினங்களுக்கு பறக்க
கற்றுக் கொடுத்த அவள் பூங்குழலில்
பிறைசூடி பரமனை வம்புக்கிழுக்க வந்தவளோ??
அடடா! அத்தனை இலக்கியமும்
அழகு மங்கை ஆனதோ???!!!
அதை தொகுப்பித்தவன் பிரம்மன் ஆனானோ???
பரிசளிப்பேன் பாங்கான பதிலளிப்போருக்கு...