வாழ்க்கை என்பது
“நம் இன்றைய வாழ்க்கை முறை நம்மை வியக்க வைக்கின்றது . இத்தகைய வாழ்க்கை முறை நம் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு உதவுமா?” என்று யாரோ பேசி கொண்டு இருந்தது என் செவியில் பட்டது. கல்லூரி முடிந்தவுடன் வீடு நோக்கி நடந்தேன். "சிறுநீர் கழிக்காதீர்!"என்று எழுத்துக்கள் கொண்ட சுவர் என் கண் முன் பட்டது. அச்சுவர்ருக்கு அபிஷேகம் செய்து கொண்டு இருந்தனர் சிலர்.
பேருந்து வருவதற்காக காத்து கொண்டு இருந்தேன். ஒருவர் என்னிடம் "தம்பி!மணி என்ன?"என்று கேட்டார்.நானும் "ஆறு மணியாச்சு"என்றேன். "தம்பி எங்க போனும்? "என்று கேட்டார்."அண்ணாநகர்” என்றேன்.என் பேருந்தும் வந்தது.என் கண்கள் அவரிடம்" நான் சென்று வருகிறேன்"என்பதுபோல் ஜாடை செய்தது.
பல நாட்களுக்கு பின் ஜன்னல் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். பேருந்து மெல்ல நகர்ந்தது, ஜன்னல் வழியாக நான் சில விசயங்களை சிந்தித்து பார்த்தேன். என் குடும்பம் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தது.என் அப்பா துணி கடை ஒன்றில் வேலை செய்யும் வியாபாரி.எனக்கு இரு சகோதரிகள்.என் வீட்டின் ஒரே பையன் நான். நான் இப்பொழுது பொறியியல் படிப்பு படித்து கொண்டிருப்பவன். என் குடும்ப கஷ்டம் என்னால் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை என்னுள் உள்ளது.
நான் என் வீடு வந்து சேர்ந்தேன். சுடச்சுட தோசை என் அம்மாவால் செய்து என் தட்டில் வைக்க பட்டது.வயிறு நிறைய சாப்பிட்டு உரங்கச்சென்றேன். மறுநாள் என் கல்லூரிக்கு செல்ல தயாரானேன்.அப்பொழுது என் கைபேசி அழைத்தது.0110001 என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.நானும் எடுத்தேன்."தம்பி உன் வாழ்க்கை முடிய போகிறது.இப்பொழுது மணி 8.உன் வாழ்வு இன்னும் 24 மணி நேரத்தில் முடிய போகிறது."என்றான்.என் கண்ணில் பயம் தெரிந்தது."நீ யார் ?"என்று நான் கேட்டேன்,அதற்கு "நான் அழைத்த எண்ணை சற்று நோக்கி பார்"என்ற பதிலுடன் இணைப்பு துண்டிக்க பட்டது.நான் அந்த எண்ணை சற்று நோக்கி பார்த்தேன்."0110001.....”அந்த எண்ணுக்கு நான் அழைத்து பார்த்ததில்”the number you are trying to reach is currently busy” என்ற வாசகம் எனக்கு கேட்டது. அந்த எண்களை நான் ஒன்று சேர்த்தேன்.என் மூச்சு நின்றது போல் எனக்கு தோன்றியது.அவ்வெண்களை சேர்த்ததால்எனக்கு கிடைத்த வார்த்தை எமன்.
என் கைக்கடிகாரத்தில் மணி 8.30. என் கண் முன் என் தந்தை,இரு சகோதரிகள்,என் அம்மா, இச்சமூகம் அனைத்தும் தோன்றின."இவை அனைத்தையும் ஒரு நாளில் சரி செய்து விட முடியுமா?" என்ற கேள்வி என்னுள் எழுந்தது,மணி இப்பொழுது 9.நான் என் கல்லூரிக்கு விடுப்பு தெரிவித்தேன்."எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் என்று காவல் துறையிடம் புகார் அளிக்க முடியாது.நான் என் மரணத்தை சந்திக்க தயாரானேன்.ஓட்டம் தொங்கியது.முதலில் எனக்கு தோன்றியது இச்சமூகம் .நேராக என் தந்தையிடம்"அப்பா! உங்கள் வண்டி வேண்டும்" என்றேன். நான் ஒன்றும் திரைப்பட நாயகன் அல்ல.ஒரே நாளில் இச்சமூகதினை திருத்துவதற்கு என்பது எனக்கு தெரியும்.இருப்பினும் என்னால் இயன்ற உதவியினை ஏழை மக்களுக்கு செய்ய வேண்டும்.நான் என் சிறு வயதில் இருந்து சேமித்த பணத்தை எடுத்து எண்ண தொடங்கினேன்.என்னிடம் இப்பொழுது இருந்தது ஒரு லட்சம்.
மணி இப்பொழுது 10.என் வாழ்நாள் குறைய தொடங்கியது.மிக வேகமாய் வண்டியை எடுத்தேன்.சாலையில் சென்று கொண்டு இருந்த பொழுது ஒரு கை என் முன் தோன்றியது.நான் வண்டியை நிறுத்தி மெல்லிய கரங்களை நோக்கி என் தலையினை திருப்பினேன்.சாலையில் பூ பூத்தார் போல அழகிய குழந்தை.வயது 5 இருக்கும்."ஐயா!"என்று அக்குழந்தை எதோ கேட்டது.நான் அக்குழந்தையிடம் "உன் அம்மா, அப்பா எங்க?” என்று கேட்டேன்,அதற்கு"சாமிகிட்ட போய்ட்டாங்க"என்றது அக்குழந்தை.அக்குழந்தையினை அணைத்து கொண்டேன்.என் வண்டியில் ஏற்றினேன்."அனைவருக்கும் வேண்டும் கல்வி"என்று நம் தலைவர்கள் கூறியது என் நினைவிற்கு வந்தது.
வேகமாக அரசு பள்ளியை நோக்கி புறப்பட்டேன்.அக்குழந்தையை இறக்கி விட்டு"இனி நீ இங்க தான் இருக்க வேண்டும்,நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்,உன்னை போல் ஏழை மக்களின் குறையை நீ போக்க வேண்டும்"என்றேன்.என்னால் ஒரு குழந்தை கல்வி பெறுவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்.
மணி இப்பொழுது 2.என் திரையில் வந்தது என் அம்மா.என் வீட்டிற்கு என் கைப்பேசி மூலம் என் அம்மாவிடம் பேசினேன்.என் அம்மா என்னிடம் கேட்டது"ஐயா!சப்பிட்டியாப்பா"என் கண்கள் மழையினை பொழிய தொடகின."என் அம்மா என்னிடம் எதுவும் எதிர்ப்பார்க்கவில்லை,நான் நலமாக இருப்பதே அவர்களது மகிழ்ச்சி என்பது புரிந்தது.
என் தந்தையிடம் நான் "அப்பா!உங்களுக்கு நான் என்னப்பா செய்யணும்!"என்று கேட்டேன்."தம்பி!நீ நல்ல இருந்தால் அதுவே போதும்” என்றார்.
மணி இரவு 8.நான் என் சகோதரிகள் பற்றி சிந்திக்க தொடங்கினேன். கடைசியாய் என் நண்பர்களை ஒரு முறை சந்தித்து விட்டு வீடு திரும்பினேன்.
வீட்டு வாசலில் எனக்காக என் அம்மா காத்து கொண்டு இருந்தார்."சாப்பிடிங்களா!"என்று கேட்டேன்."நீ இல்லம்மா எப்படி பா? "என்ற என் அம்மாவை நான் கண்ணீர் மல்க பார்த்தேன்.என்னிடம் இருந்த ஒரு லட்ச ரூபாய் தொகையில் 200 ரூபாய் பெட்ரோலுக்கு செலவிட மீதி இருந்த தொகையினை என் அம்மாவிடம் நீட்டினேன்."என்னடா இது?"என்று என் அம்மா கேட்க"அக்கா திருமணத்திற்கு"என்று கூறி உரங்கச்சென்றேன்.
காலை மணி 7 இருக்கும்.என் கைப்பேசியில் 0110001 என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.நான் எடுத்தேன்."நீ தயாராக இரு 7'59 மணிக்கு ஒரு அழைப்பு வரும்.அதை எடுத்தவுடன் உன் உயிர் பிரிந்துவிடும்."என்ற சொற்கள் கேட்டது.நான் நேராக பூஜை அறை சென்று என்றும் வணங்காத இறைவனை வழிபட்டேன்.
மணி 7'58' இருக்கும்.என் கண்களில் பயம் தெரியவில்லை.இவ்வயதில் இறப்பதற்கு நான் எவ்வித தவறும் செய்யவில்லை என்பது எனக்கும் என்னை பெற்றவர்களுக்கும் தெரியும்.
மணி 7'58'59 வினாடிகள் ஆனதும் என் கைப்பேசிக்கு அழைத்த எமனுக்கு”the number you are trying to reach is currently switched off please try again later” என்ற வாசகம் கேட்டிருக்கும்.அதை கேட்டவுடன் அவன் உயிர் பிரிந்திருக்கும்.
அன்று நான் வாழ்க்கையின் தத்துவத்தினை உணர்ந்தேன்.வாழ்வுக்கும் சாவுக்கும் நடக்கும் போராட்டமே வாழ்க்கை என்பது எனக்கு தெரிய வந்தது.என் தாய் தந்தையின் ஆசி பெற்று என் கல்லூரிக்கு புறப்பட்டேன்……………….