விதியின் விளையாட்டு18

மருத்துவமனையில் மதனின் கைகளை பற்றிக்கொண்டு ஒருவர் கதறி அழுது மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார்..........

மதனுக்கு எதுவும் புரியவில்லை விழித்துக்கொண்டிருந்தான்.

அப்பொழுது அங்கு வந்த அதிகாரி வினோத், கைகளை நீட்டி மதனின் கைகளை பிடித்து குலுக்கி விட்டு வருத்தப்படாதீர்கள் எல்லாம் நல்லதாய் முடிந்தது என்றார்..........

இது நிஷாவின் தந்தை நிஷா இப்பொழுது சரி ஆகிக்கொண்டிருக்கிறாள், மயக்க நிலையிலிருந்து எழுந்து விட்டாள்.... என்று சொன்னதும் மதனின் மனதுக்கு இதமாய் இருந்தது.

உன் மீது நிஷா குடும்பத்தினர் கொடுத்த கம்பிளைன்ட் தவறானது......

நிஷாவே சொல்லி விட்டாள் "அப்பா எனக்கு பிடிக்காதவரை வேண்டாமென்று சொல்லியும் கேட்காமல் கட்டாயமாக திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தார் அதனால் தான் தற்கொலைக்கு முயன்றேன்" என்று சொல்லிவிட்டாள் அதானால் நீ பயபடாமல் தைரியமாக இரு என்று சொன்னார் போலிஸ் வினோத்............


சரி! என்று சொன்னவன் திரும்பி நிஷாவின் அப்பாவை பார்த்தான்.

என்னை மன்னித்து விடுப்பா! என்று மறுபடியும் கெஞ்சினார்........!

மதன் அவருடைய கைகளை பற்றி தன் மார்போடு அணைத்தவன் மனதிற்குள்"கடவுள் தான் நிஷாவையும் என்னையும் காப்பாற்றியுள்ளார் என்று நினைத்து கொண்டான்"...!

அப்பொழுது அதிகாரி வினோத் என்ன சார் தேவை இல்லாமல் மதன் மேல் கம்பிளைன்ட் கொடுத்து.....பாவம் உண்மைலயே நிஷாவுக்கு ஏதாவதுன்னா மதன் மேல தான் நாங்க ஆக்க்ஷன் எடுத்திருப்போம்.....

பாவம் அவர் செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிச்சிருப்பார்,,,, என்று சத்தமாக பேச ஆரம்பித்தார்.....!

அதற்கு மதன்..............

வேண்டாம் சார் அவரை திட்டாதீர்கள் அவர் தெரியாமல் செய்த தவறுக்கு நாம் தெரிந்தே தவறாக நடந்துகொள்ளவேண்டாம் என்று நிதானமாய் பேசினான்.......

அவனை வருத்தத்தோடு பார்த்தார் நிஷாவின் அப்பா.

சரிப்பா!!! வருத்தபடாதீங்க நான் கிளம்புறேன் நிஷாவ பார்த்துக்கோங்க என்று சொல்லி விட்டு ஒரு முறை நிஷாவையும் பார்த்து பேசி விட்டு சென்றான் மதன்.

வீட்டில் யாரிடமும் நடந்த விஷயத்தை சொல்லாமல் இருந்தான் மதன்..,,,,,,,
_________________________________________________

அடுத்த நாள் கல்லூரிக்குள் கால் வைத்ததும் ரிஷானி மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் இன்று எப்படியாவது நேரடியாக காதலை மதனிடம் சொல்ல வேண்டும் என்ற முடிவோடு வந்தாள்.


வந்ததும் மதன் காட்சியளிக்கும் அனைத்து இடங்களிலும் இவளுடைய கண்கள் நோக்கின ஆனால் மதனை காணாததால் மனது ஒடிந்து விட்டாள்.......!

மதிய வேளையில் மதன் சாப்பிட செல்லும் முன் மதன் வகுப்பை அடைந்தாள் ரிஷானி.

அங்கு மதனும் அவனுடைய நண்பர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்....

"நான் காதலை சொல்வதற்கு முன்னால் என்னை சுற்றி சுற்றி வந்த உன் கால்கள் இப்பொழுது நான் காதலை சொன்னதும் ஒய்ந்தனவோ???"
என்று ஆக்ரோஷமாக கேட்டாள்?

ஏன் ரிஷானி இப்படி கேட்கிறாய் எப்பொழுதும் நான் இந்த பூவை சுற்றும் வண்டுதான் என்று சொல்ல நண்பர்கள் சிரித்து விட்டு அங்கிருந்து கிளம்பினர்.

அப்போ ஏன் இதுவரைக்கும் என்னை பார்க்க வரவில்லை என்று கேட்டாள்?

நானும் என் நண்பர்களும் இப்போதுதான் நிஷாவை மருத்துவமையில் சென்று பார்த்து விட்டு வருகிறோம், நீ சாப்பிட்ட பிறகு உன்னை வந்து பார்க்கலாம் என்று தான் நான் வரவில்லை ஆனால் நீ அதற்குள் வந்து என்னென்னவோ பேசுகிறாய்..........

சரி...! அப்புறம் என்று கேட்டான்,

அப்புறம் நான் சொல்கிறேன் என்று ஒரு குரல் வெளியே கேட்க இருவரும் திரும்பினர்...........





விதி தொடரும்.........

எழுதியவர் : ப்ரியா (10-Apr-14, 12:09 pm)
பார்வை : 238

மேலே