என்னவளைத்தேடி .......

என்னவளை தேடி செல்லும் வழியில் அவளை கண்டாயா என (கதிரவனய்) கேட்டேன் ,
கண்டேன் உன் அவளை ஆனால்
அவள் விழிகளின் பிரகாசத்தில் என் கண்கள்
கூசியதால் கண்களை மூடிவிட்டேன்
சென்ற வழி அறியேன் என்றது.......

மலரிடம் கேட்டேன்,
கண்டேன் அவளோ
தென்றலை போல என்னை வருடி செல்ல
நானோ மயக்கத்தில் ஆழ்ந்துவிட்டேன்
சென்ற வழி அறியேன் என்றது.....

மலையிடம் கேட்டேன் ,
கண்டேன் ஆனால்
அவளின் முன்னழகு கண்டு
என் மூச்சடைத்து விழுந்தேன்
சென்றவழி அறியேன் என்றது........

மின்னலிடம் கேட்டேன் ,
கண்டேன் அவளின்
இதழ் தந்த சிரிப்பில் நான் சிதறிவிட்டேன்
சென்றவழி அறியேன் என்றது........

இறுதியாக நிலவிடம் கேட்டேன் ,
கண்டேன் ஆனால்
அவளின் முகமோ என்னைவிட அழகு
பொறாமையில் என் முகத்தை திருப்பிவிட்டேன்
சென்றவழி அறியேன் என்றது .........

இனி நான் யாரிடம் கேட்க
இயற்கையே அவளின் அழகில் இயல்பிழந்து நிற்கிறது .
வெறும் உயிர்கொண்ட மனிதனின் நிலை என்ன ஆகும்.........................

எழுதியவர் : ஈஸ்வர்தனிக்காட்டுராஜா....... (24-Feb-11, 5:35 pm)
பார்வை : 343

மேலே