என் அன்பு மனைவி

பொழுதுகள் மெல்ல செல்ல
இரவுகள் இனிமையாய் கழிய
கனவுகள் கனியாய் இனிக்க
என் இரவு உன் நினைவில் பயணிக்கிறது

உன்னை முதலில்
முதல் நாள் இரவு பெய்த
அடைமழையின் சாட்சியாய்
சிந்திய அந்த தூரலில்
உன் துப்பட்டா பறக்க
நீ அதைவிரட்டி மரதன் ஓடினியே
அந்த நினைவுகள்

உன் கல்லூரி வாசலில்
உன் வருகையே எதிர்பார்த்து காத்திருக்கையில்
அதை அறிந்த நீயும் அறியா வண்ணம்
ஓரக்கண்ணில் என்னை பார்த்து
இதழ்கள் விரியாமல் புன்னகைத்தியே
அந்த நினைவுகள்

உன் நட்புக்காய்
உன் தோழியை தோழமை சேர்த்து
உன் வீட்டில் ஒரு நாள் அரட்டை அடிக்கையில்
நீ போட்ட தேநீரை
நான் தேன்சுவை என்று சொல்ல
நீ வாய் விட்டு சிரித்தியே
அந்த நினைவுகள்

என் மனமும் உன் மனமும்
ஒன்றாய் சிந்தித்த அந்த தருணம்
வெட்கத்தோடு என் கைசேர்த்து
என் வாழ்கை துணையாய்
நீ வருவாயா என்று கேட்டியே
அந்த நினைவுகள்

உன் துணையாய் நானும்
என் துணையாய் நீயும்
சேர்ந்த அந்த முதல் இரவு
நீ என் தோள்கள் சாய்ந்து
உன் ஆசைகள் என்னிடம் கூறி
என் இதழ்களும் உன் இதழ்களும் சேர்ந்த
அந்த நினைவுகள்

இனிமையாய் கழிந்த
நம் வாழ்க்கைக்கு சாட்சியாய்
உன் கற்பில் என் கரு வளர
என் கைகள் பிடுத்து
உன் கண்ணீர் கசிய நீ சொன்னியே
நான் அம்மாவாகப்போகிறேன் என்று
அந்த நினைவுகள்

கருவும் குழந்தாய் மாற
பிரவசிக்கும் காலம் நெருங்க
உன் துணையாய் நான் மட்டும்
உன் அருகில் நிற்க
குழந்தை அழுகையோடு
உன் அலறும் சத்தம் ஓய
உன் ஆத்மா பிரிந்தது தெரியாது
நான் உன்னிடம்
நம் குழந்தை பார் என்றேனே
அந்த நினைவுகள்

இன்று நம் குழந்தையை
பார்ப்பவர்கள் பாராட்டும் வண்ணம்
உன் முதலிரவு ஆசை படி
வைத்தியனாய் ஆக்கிவிட்டேன்
ஆனால்
நீயம் சாதாரண பெண் போல்
என்னையும் ஏமாற்றிவிட்டாய்
என் மரணத்தின் முன்
நீயும் மரணித்து விட்டாய்

என்றும் உன் நினைவுகள்
என் இரவுத்தூக்கதில் இனிமையாய் மலர
உன் கணவனின் கனவில்
நீயும் தினமும் மலர்வாயா
என் அன்பு மனைவியே

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (11-Apr-14, 5:03 pm)
சேர்த்தது : nuskymim
Tanglish : en anbu manaivi
பார்வை : 6673

மேலே