ஒரு மார்கழி குளிரினிலே

ஒரு மார்கழி குளிரினிலே
நான் நடந்திடும் வேளையிலே.
ஒரு தேவதை வந்தாளே
மணி என்னென்று கேட்டாளே.
நான் பார்க்கிற பொழுதினிலே
மணி ஆறாறை ஆகியதே.
அவள் விழிகளில் மட்டும் ஏனோ
இன்னும் பனியில் மூழ்கியதே.
முன்னோக்கி நடந்தாளே
அவள் பின் இதயமும் சென்றதே.

அவள் நடக்கும் பாதையிலே
நானும் நடை பழகினேன்.
அவள் பார்க்கும் நேரம்
நான் நிழலென மறைகிறேன்.
அவள் பின்னழகில் கூந்தல்
சூரியனை போல அங்குமிங்கு சுற்றியதே
அவள் கூந்தலை கண்டு
விழிகள் ஏனோ மயக்கத்தில் சொக்கியதே.
கண் மூடி திறந்தேன்
அவள் வீடு வந்ததே.

வீட்டினில் சென்றவளோ
அரிசி மாவினை கொண்டு வந்தாள்.
மாவினை அழகழகாய் சிறு
எறும்பிற்கும் காலை உணவளித்தாள்.
அவள் அமர்ந்திடும் வேளையிலே
நான் உறைந்தே போனேனே.
நிலா நதியில் குளித்து வந்தவுடன்
ஸ்ரீ தேவியை கண்டேனே.
அதை ரசிப்பதற்குள்ளே
நேரம் கடந்தது உடன் நானும் நகர்ந்தேனே.

எழுதியவர் : அம்மு (1-Jun-10, 4:22 pm)
சேர்த்தது : கவி ப்ரியன்
பார்வை : 615

மேலே