அம்மா உன் கைப் பக்குவம் 001

இடுப்பு வலிக்கும் வரை
மிளகாய் கூட்டரைத்து
பக்குவமாய் அடுப்பில் காச்சி
நாக்குக்கு ருசியாய்
அன்னம் தரும் போதெல்லாம்
அதில் எதோ குறை கூறி
சுவைத்து உண்ணும் போது அறியவில்லை
இதுக்கும் எனக்கு தண்டனையிருக்குமென

உணவுப்பொருட்களெல்லாம்
அலங்கரிக்கப் பட்டிருக்கும்
கண்ணாடி பெட்டிக்குள்
அள்ளி உண்ணும் போது
அம்மா உன் கைப் பக்குவம்
நினைவு வரும்
சாதமும்
சம்பலென்றாலும் சந்தோஷம் நிறைந்திருக்கும்
பொறுப்பு வந்தவுடன் புறப்பட்டு வந்திருக்கின்றேன்
பெரிதாய் வாழ வைக்க வேண்டும் என்ற
கனவுகளோடு வேறு தேசத்துக்கு

எழுதியவர் : அ க ம ல் தா ஸ் (12-Apr-14, 6:53 pm)
பார்வை : 262

மேலே