தீண்டத்தகாதவனாக



என் தாயின் கருவறையிலிருந்து
பிரவசித்து விட்டேன்
முதல் அழுகையோடு...

வாரி அணைத்து,
கொஞ்சி முத்தமிட
யாரும் விரும்பவில்லை...

தந்தையை கொன்ற நோயால் உறவுகளும் எட்டிப் பார்க்க வில்லை...

தாய்ப்பால் கொடுக்க
தாயும் அருகில் வரவில்லை...

கள்ளிப்பால் கொடுக்க கூட நாதியில்லை...

சுண்டு விரலால் கூட
என்னை சீண்ட யாருமில்லை....

கருவறையைக் கூட எனக்கு
கல்லறையாக ஆக்கியிருக்கலாமடி
என்னை பெற்றவளே ...

நீங்கள் செய்த பாவத்திற்காக தீண்டத்தகாதவனாக நான்...

எழுதியவர் : kalai (25-Feb-11, 8:51 am)
பார்வை : 437

மேலே