கவிதைகள்

பிறந்த நாளை கொண்ட்டாடி என் இழப்புகளை தேட சொல்கிறாயா !

கட்டி வைத்து
காத்திருந்ததை
களவாடி விட்டு விட்டாய்
என்று !
எள்ளு கொள்ளுகிறது
என் எண்ணம் ...

சிரித்து அன்பைதருபவள் எல்லாம்
சிங்கார அழகை இழப்பவள் அல்ல ...
வஞ்சக கூட்டத்தை தெரிந்துக்கொள்ள !
மௌனமாக இருப்பவள் எல்லாம்
சிங்கார அழகை ஆதரிப்பவளும் இல்லை !
நாட்களுக்கு பதில் சொல்ல
நடை பயிற்சி கற்று கொள்கிறாள்!
கூட்டத்தின் நடுவில் இருந்து கொண்டு
தனிமையான வெற்றியை எப்படி தேடுவது ...

மேக கூட்டத்துக்குல்
ஒளிந்த்துதான்
வாழ ஆசைப்படுகிறேன் !
மேகம் களைந்துவிட்டால்
வெறுமையாக தெரிவேன் !
பல்லாயிரம் பார்வைகளுக்கு
பதில் சொல்ல முடியாமல் தான்
பகலை தேடிவந்துவிட்டேன்...
பகலிலும் ஏன் நிலைவை தேடுகிறாய் ...

திமீரான வீரத்தை
உன்னிடத்தில் நான்
களவாடிவிட்டேன் என்று !
எத்தனை முறை !
தலை கவிழ்ந்து
தோற்றுப்போனேன் !
புரியவில்லையா.....?அன்பானவனே ...

வண்ணத்து பூட்சியாக
வானத்தில் பறக்கவேண்டும் ...
கள்ளத்தனத்தையும் !
கலவாடுவதையும்
கற்றுதராதே ....

நீ தழுவும் உணர்வுகளில்
நான் சுகம் பெறுவேனா என்று
கணக்கு பார்த்தது கிடையாது !
உன் கண்களும்
உன் எண்ணமும்
தழுவும்
உணர்வுகளில் நான்....
எத்தனை முறைவேண்டுமானாலும்
மடிந்துபோக தோன்றும்...

என் மனதுக்கு தெரியாமல்
கேட்டுவிடு....
நான் பொழிந்துவிடுகிறேன் !
யாருக்கும் தெரியாமல்
அன்பை சொல்லிவிடு ...
நான் யோசித்துக்கொள்கிறேன் !
எல்லாருக்கும் தெரிந்து
என்னை அழைத்துவிடு ....
நான் மறுத்துவிடுகிறேன் !

உன்னை புகைப்படம் எடுத்து
எப்பவாது பார்த்துக்கொள் ....
உன் அன்பை எடுத்து
எப்பொழுதும் பார்த்துக்கொள்ள ...

எழுதியவர் : திலகம் (13-Apr-14, 12:03 pm)
சேர்த்தது : Thilaga Vathi
Tanglish : kavidaigal
பார்வை : 59

மேலே