ஜயம்ஜயம் ஜயமென ஜயிக்கவா

ஜயம்ஜயம் ஜயமென ஜயிக்கவா!
சகலரும் உனைஅதி சயிக்கவா
செயல்படும் மதியுடன் வருகிறாய்
ஜெகத்தினில் நிறைமதி தருகிறாய்
ஜெகத்தினில் நிம்மதி தருகிறாய்
சித்திரை திங்களில் வருகிறாய்
சித்திரை திங்களை தருகிறாய்
கத்திரி வெயிலினில் வருகிறாய்
கற்பனை பதனீர் தருகிறேன்
நாளும் விசிறிகள் தொடர்கிறார்
நட்சத்திரமாய் வருகிறாய்
ஆளும் ஆட்சியை கொணர்கிறாய்
அடடா தேர்தலாய் வருகிறாய்

எழுதியவர் : சு.அய்யப்பன் (14-Apr-14, 10:06 am)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 49

மேலே