அவள் என் தேவதை
பட்டென பார்வையில்,
சிட்டென நடையில்,
சட்டென மாறிப்போனால் அவள் என் தேவதை!!
நேற்று முதல் இல்லை வெகு நாட்களாகவும் இல்லை
இன்றே முதன்முறை மாறிப்போனாள் அவள் என் தேவதை!!
அவள் முக்குக் கண்ணாடியில் குவித்துப் பார்க்கிறாள்
யாரோ இவன் என்று
அவளின் மூக்கின் நுனி அழகில் தவித்துக் கிடக்கிறேன்
பாவம் நான் இன்று
ஆம் அவள் என் தேவதை!!
அவள் கோலம் போட புள்ளி இட்டு
பல கோணங்களில் கோடு போட்டு
வர்ணங்களையும் கூடச் சேர்த்து முடித்தாள்
ஆனால் விளங்காமல் நிற்கிறேன் கோலம் போட்டது
வாசலிலா என் மனதிலா என்று!!!
விடைகள் அறியாமல் விழித்துக் கிடக்கிறேன்
வழிகள் அறியாமல் அவளைத் தொடர்கிறேன்
பல்லவியோ சரணமோ எனக்குத் தெரியவில்லை
இடைவிடாமல் மட்டும் சொல்கிறேன்
அவள் என் தேவதை!! என்று.