அம்மாகுட்டி கவிதை

அம்மாகுட்டி
இன்னும் உறங்கவில்லை
விளையாடிக் கொண்டிருக்கிறாள்

சத்தமாகத் தும்மிக் கொள்ளலாம்
தொலைக்காட்சியில் செய்திகள் பார்க்கலாம்
துணிகளை மடித்து வைக்கலாம்
மின்னஞ்சல்களுக்கு பதிலனுப்பலாம்
முகநூலில் நிலைத்தகவலிடலாம்

அம்மாகுட்டி கண்ணைக் கசக்கிவிட்டாள்
மூன்றாவது தெருவின்
நாய்க்குரைப்பைக் கடந்து
இன்னும் சற்றுநேரத்தில் வந்துவிடக்கூடும்
அவளுக்கான உறக்கம்
இனி வெளிச்சம் எட்டிப்பார்க்கும்
காலையில்தான்
அறையைவிட்டு வெளிவர இயலும்
தாயும் சேயும்

எழுதியவர் : இவள் பாரதி (17-Apr-14, 4:26 pm)
பார்வை : 193

மேலே