சிந்தனை வெளியில் பயணம்

காலத்திற்கும் கற்பனைக்கும்
நடந்த திருமணத்தில்
கருத்தரித்த முதல் மனிதன்...
தந்தையாய் காலம்
தாயாய் கற்பனை
காலம் வயது தந்தது
கற்பனை வாழ்வு தந்தது
முதல் மனித தனிமை
எப்படி இருந்திருக்கும்?..
அவனது அதிக பட்ச தேவை
ஆக்சிஜன் மற்றும் பச்சை உணவு மட்டும் தான்..
காலம் தாயாய் மாறி
கற்பனை தந்தையாகி
மாற்று திருமணத்தில்
முதல் பெண் பிறந்திருக்கலாம்
ஆணின் தேவை இயற்கை யானதல்ல
இயற்கை அவனுக்கு செயற்கையாய் தந்தது...
புவி ஈர்ப்புக்கு முந்திய ஈர்ப்பு
பெண்பால் ஆணுக்கு ஏற்பட்டதே
இத்தனை மாற்றத்தை
இருவரும் அறிந்தே இருந்தனர்..
முதல் கர்ப்பத்தில்
அந்த தாய் சுமந்தது..
இன்று நீ காணும்
இந்த மொத்த உலகையும்தான் ......(தொடரும்)

எழுதியவர் : அபி என்ற நௌபல் (20-Apr-14, 3:34 pm)
பார்வை : 103

மேலே