எல்லாம் நீ

காலையில் எழும்போது கடைசி கனவு நீ,
கதிரவன் தாக்கலின் ஓர் சுகம் நீ,
முள்ளின் வலியிலும் ஓர் சுகம் நீ,
சுமையிலும் ஓர் சுகம் நீ,
கல்லினால் பட்ட காயத்தில் விழும் கண்ணீர் நீ,
சொல்லினால் சுடும் சுகம் நீ,
இசையினால் என்னுள் இருக்கும் இசையும் நீ,
நினைவினால் என்னைக் கசக்க வைத்த கசப்பும் நீ,
பண்பினால் என்னில் பிணைத்த பண்பும் நீ,
கண்ணினால் கலந்த கண்ணிமையான சுகம் நீ,
சுகமான சுகம் நீ,

உணர்வித்த சுகம் நீ,
இறுதியில் உணர்வற்ற நிலையிலும் உயிர்பிக்கின்ற சுகம் நீ!!!

எழுதியவர் : எண்ணத்திரவங்கள் (25-Apr-14, 2:31 pm)
சேர்த்தது : எண்ணத்திரவங்கள்
Tanglish : ellam nee
பார்வை : 93

மேலே