இதயத்தில் உன் பிம்பம்

உன்னை பார்த்த பின்
என் மனதில்
மழை பெய்கிறது
பெய்த மழையால்
என் இதயத்தில்
தேங்கிய நீர் நிலையில்
உன் உருவ பிம்பம்
தெரிகின்றது

என் இதயத் துடிப்பினால்
உண்டான அதிர்வலையில்
உன் பிம்பம்
மெல்ல கலைவதை கண்டு
என் மனம் தவிக்கின்றது

என் இதயத்திடம்
மெதுவாய் துடிக்கச் சொல்லி
கெஞ்சுகிறது !!!

எழுதியவர் : ஜான் பிராங்க்ளின் (25-Apr-14, 7:52 pm)
பார்வை : 195

மேலே