சபலம்

சபலத்தின் திரவங்கள்
திராவகத்து நீர்மங்கள்
தாகத்தில் அருந்திவிட்டால்
தேகத்தை உருக்கி விடும்
விரல் கொண்டு தீண்டிவிட்டால்
விரல் நுனியை எரித்துவிடும்

இது
இடமறியா பொருளறியா
வயதறியா வரைமுறையும் அறியா
சாத்தானின் நெறிமுறை
உறவறியா உணர்வறியா
இரவறியா பகலறியா
உள்ளத்தில் கள்ளம்
காக்கும் கயவர்களின்
மதிகெட்ட விதி முறை


சதைக்குள் கசிந்து விட்டால்
சபலச் சீழ்
சந்நியாசமும் சந்திக்கும்
அவலத்தின் ஊழ்
புகுந்துப் புதைந்தால்
சல்லாபத்துள்
சிக்கிச் சீரழிவான்
சம்சாரியும்
சபலத்தின் சடைக்குள்


தாரமே நிரந்தரம் என்ற
தாரக மந்திரமும்
தகர்ந்து தகனமாகும்
தலை கொடுத்தால்
சபல எந்திரத்திலே
மானமே முதல் இடம் என்ற
மாண்புமிகு மகத்துவமும்
மரணித்துப் போகும்
சபலத்தின் சந்தியிலே

எழுதியவர் : கீதமன் (25-Apr-14, 7:53 pm)
பார்வை : 119

மேலே