உள்ளத்தில் தைத்த முட்கள் உன் வார்த்தை 555
என்னவளே...
என்னவள் நீ என்று
என்னில் ஆசை வளர்த்தேன்...
என் உள்ளத்தில்
உன்னை வைத்தேன்...
உன்னை காண ஒத்தையடி
பாதையிலே ஓடி வந்தேன்...
என் பாதம் தைத்த
முட்களின் வலிகள் கூட சுகமாக...
வார்த்தை முட்கள்
ஒன்றை தொடுத்தாய்...
என் மீது ஆசை
இல்லை என்று...
உள்ளத்தில் தைத்த
முள்ளாய் வலிக்குதடி...
விலகி நான்
சென்ற போதும்...
என்னை சுற்றியே
வந்தாயே...
என்னை விட்டு
விலகி செல்லவா...
நீ இல்லாத இந்த
வாழ்க்கை...
மரித்துவிட
மனம் என்னுதடி...
என் பெற்றோரின்
கஷ்டங்கள்...
என் கண் முன்னாள்
நிற்குதடி...
தூண்டிலில் சிக்கிய
மீனாய் துடிகிறேனடி கண்ணீரில்...
மண்ணில் வாழ
ஆசை இல்லை...
என் உடலை மண்ணில்
புதைக்கவும் வழி இல்லை...
ஒற்றை பனைமரம்
கட்டுமரமாகுமா...?
நான் மட்டும் வாழும்
வாழ்கை வாழ்க்கையாகுமா...?
என்னவளே உணர்ந்து
கொள்வாயா என்னை...
விலகி நின்ற என்னை
நீ விட்டிருக்கலாம்...
என்னில் ஆசை வளர்த்து
விலகி நிற்பது ஏனடி...
என்னவளே உணர்வாய
உன் தவறினை...
ஒருமுறை.....