காதல் தீபம்

விடிந்தும் விடியா நேரம் ஏற்றிய மெழுகு தீபம்
என் காதல்,
திரியாகத்தான் என்னை எண்ணியிருந்தேன்,
தீயே உன்னை தாங்கி பிடிக்கும் வகையில்,
ஆனால் மெழுகு நான், காணாமல் கரைகிறேன்,
உருகுதல் தியாகமா? உன்னை விலகும் வேகமா?
நீ தீயாகவே நிற்கிறாய்,
விடை தெரியாது நான் கரைந்து கொண்டேதான் இருக்கிறேன்!!!

எழுதியவர் : கணேஷ் .க (28-Apr-14, 9:03 pm)
சேர்த்தது : GANESH K
Tanglish : kaadhal theebam
பார்வை : 193

மேலே