நகைச்சுவை 107

சந்தையில் ஒருத்தியின் கைப்பையை ஒருவன் பறித்துக்கொண்டு ஓடினான். திருடன் திருடன் என்ற கூக்குரலிட்டாள் அந்தப் பெண். அச்சமயம் அவள் அருகில் இருந்த மற்றொருவன் ஓடத்தொடங்கினான். அவன் பின்னல் பலரும் ஓடி, அந்த மற்றவனைப் பிடித்துவிட்டனர். உண்மையில் திருடியவன் தப்பித்துவிட்டான். அந்த பிடிபட்டவன் "நான் திருடவில்லை என்று பலமுறை சொல்லியும், எல்லோரும் சேர்ந்து அவனுக்கு தர்ம அடி கொடுத்தனர். அப்பொழுது பையை பறிகொடுத்தவள் அங்கு வர, அடிபட்டவன் அவளிடமும், "மேடம் .. நான் உங்கள் பையை திருடவில்லை என்றான். உடனே அவள் "நெஞ்சில் கை வைத்து உண்மையை சொல்" என்றதும், அவள் நெஞ்சில் இரு கைகளையும் வைத்து, மீண்டும் "மேடம் .. நான் உங்கள் பையை திருடவில்லை. இது உண்மை. திருடியவனை பிடிக்கத் தான் நானும் ஓடினேன்" என்றான். உடனே, அந்தப் பெண்ணைத் தொடர்ந்து மற்றவர்களும் அவனை அடித்தனர்.

ஏன் ?

எழுதியவர் : (29-Apr-14, 8:48 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 198

சிறந்த நகைச்சுவைகள்

மேலே