திருவந்த்ததி

அடியும் சீரும் அசையும் எழுத்தும்
முடிவு முதலாச் செய்யுள் மொழிக்
அந்தாதித் தொடையென அறைதல் வேண்டும்

இது யாப்பருங் காலக் காரிகை சொல்லும் இலக்கணமாகும் . ஒரு பாட்டின் ஈற்றடியாவது .அசையாவது, எழுத்தாவது, அடுத்த பாட்டின் முதலாவதாய் ,அதாவது ஆதியாய் வருவது அல்லது அமைவது அந்தாதி ஆகும்.
பொதுவாக அந்த்ததி நூறு பாடல்களைக் கொடிருக்கும் . காப்பு செய்யுள் நீங்கலாக. சமிப காலங்களில் மரபில் எழுதும் அருகிக் கொண்டிருக்கும் காலம் இது.. அதுவும், அத்ததி எழுதுபவர்கள் இன்னும் வர வேண்டியதிருக்கிறது.
எங்கள் திருநெல்வேலி நகரில் அமைந்திருக்கும் கம்பா நதி காமாட்சி அம்மன் மீது நான் இயற்றிய திருவந்த்ததி இது. மொழி வணக்கம்,கணபதி காப்பு, நூல், நூல்பயன் சொல்லும் பாடல் உட்பட 107
பாடல்களைக் கொடாது இந்நூல் .கட்டளைக் கலித்துறையில் அமைந்தது. இறைவன் அருள் சிதிக்குமானால் தினம் இரண்டு பாடல்கள் வீதம் இதில் பதிவு செய்யலாம் என்று எண்ணி உள்ளேன் .சுவைத்தால் வரவேற்பு தாருங்கள் .
அன்புடன் ந. ஜெயபாலன்,
பைந்தமிழே ! வேண்டுவேன் ,பாடும்
பொருளில் வளர்ந்திங்கு!
பைந்தமிழே ! வேண்டுவேன் ! பாடும்
பொருளை வளர்த்திங்கு !
பைந்தமிழே ! வேண்டுவேன் ! பாட
வருவாய் துணைநின்று!
பைந்தமிழே ! இங்குவா! பண்ணோடு
பாடும் பலம் தந்தே!

( தொடரும்)

எழுதியவர் : மரபுக் கவிதை (1-May-14, 7:05 pm)
பார்வை : 63

மேலே