செல்பேசி

ஓடி போனவளுக்கு
துணையானது செல்பேசி....
ஆம்
பன்னிரண்டாம் வகுப்பு
கடைசி தேர்வன்று
காணாமல் போனாள் கல்பனா
காதல் வலையில் சிக்கி
காதல் வளர்க்க
தூதாய் அமைந்தது
செல்பேசி
படிப்பறிவில்லா
பெற்றோருக்கு
அவள் குறுஞ் செய்தியில்
நட்பு வளர்த்ததும்
வாட்ஸ் அப்பில்
காதல் வளர்த்ததும்
தெரிந்திருக்க நியாயம் இல்லை
பாட நூலின்
நடுவே வைத்து
முக நூலில்
மூழ்கியது
ஆசிரியர் அறியவில்லை
வகுப்பை கட் அடித்து
காதலனுடன் கைகோர்த்து
கடற்கறை மணலில் விளையாட
உடனுக்குடன் தகல் பெற்று
ஓயாமல் தகவல் கொடுத்து
தித்திப்பாய் சந்திப்பை
கச்சிதமாய் நிகழ்த்திவிட
பேருதவி புரிந்தது
செல்பேசி
கடிதம் தேவை இல்லை
நண்பர்கள் தூது இல்லை
செல்பேசி ஒன்றே போதும்
எளிதாய் காதல் வளர்க்க...
ஊரே உறங்கும்
அர்த்த ஜாம நேரத்திலும்
மெளனமாக்கப்பட்ட செல்பேசி
காதல் மொழி பேசியது...
இ.மெயில் வழியாகவே
ஓடிப்போகும் திட்டத்திலும்
பெரும் பங்கு செல்பேசிக்கே....
என்று எப்போது எங்கு
அனைத்து தகவலும்
உடனுக்குடன் பறிமாற
செல்பேசி அருளியது.
தகவல் தொழில் நுட்பம்
இப்படியுமா பயன்படும்?
காதலா? காமமா?
என்றுணரா பிள்ளைகட்கு
செல்பேசி வரமா?
பயனறியா பயனாளிகளால்
சீரழிகிறது செல்பேசி
அய்யகோ பாவம்!

எழுதியவர் : சித்ரா ராஜ் (4-May-14, 5:50 pm)
சேர்த்தது : சித்ராதேவி
Tanglish : selpesi
பார்வை : 343

மேலே