வந்து விடு ஒருமுறை ...
எந்தன் இதயம் துடித்துக்கொண்டு இருப்பதே
உந்தன் காதலில் தானே ....நான் வடிக்கின்ற
ஒவ்வொரு கவிதையும் உந்தன் நேசமே ....
உன் குரல் கேட்டு விடியவே என் ஒவ்வொரு
விடியலும் எதிர்பார்கிறது ..........
உந்தன் அரவணைப்பின் சுகதிற்காக
ஏங்குது என் மனசு ..........நீயோ
என்னை வந்து தழுவாமல்
தொலைவில் இருந்தே எந்தன்
தூக்கத்தை பறிக்கிறாய் .........
உந்தன் உறவை நான் மறக்கவும் இல்லை
நான் உணர்வுகள் அற்ற ஜடமும் இல்லை
உன்னவள் நெஞ்சின் வலியின் ஒலி
உந்தன் செவியில் விழவில்லையா ....
உந்தன் அன்பில் சுகம் தேடும்
சுமை தாங்கி நானடா ........
உன் நிழல் கூட தீண்டுவதற்கு
எனக்கு தகுதி இல்லையா ......
உன் இருவிழிகளுக்குள் ஒருமுறை
வாழ்ந்து விட ஏங்குகிறேன் .....
நான் மரணப்படுக்கையில் போகும்
முன்பு வந்து விடு ஒருமுறை ....