+++எனை சோதிக்காதே+++

ஜென்னலோர
தென்றல்
எனை கடந்து சென்றது
அவளின் பார்வையெனும்
ஒருவழியே.............!

நான் தான் நீ என
சொல்லித்தானே
நானே தெரிந்துகொண்டேன்
உனது காதலன் என்று...........!

உயிரோடு
உயிராக நீ இருக்க எனது
பார்வை உலகத்தை
காண்கிறது
வெற்றிடமாக
தெரிகிறது.............!

ரோஜா இதழுக்கு
முட்களால் ஆபத்து
விளைந்திடுமோ
என்னால் உனக்கு
எதுவும் நேர்ந்திடுமோ............!

உன்னை சுமக்க
நான் இருக்க எனை நீ
சுமையாக
நினைக்கிறாய்............!

சோதனைதான்
வாழ்வில் ஆனால் நீ எனை
சோதிப்பதில்
என்னதான் எனது
வாழ்வில்............!

எழுதியவர் : லெத்தீப் (8-May-14, 8:17 am)
பார்வை : 96

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே