வெளிச்சம் 4
இயற்கையோடு ஒன்றியிருக்கும்
போது துன்பன் என்பது கிடையாது
காற்றை நாம் ஆராய்ந்து பார்த்தால் அது நிலையற்றது என்பதை எல்லோராலும் விளங்கிக்கொள்ள முடியும். அதே நேரத்தில் ஓரிடத்தில் உள்ள காற்று அணுக்கள் விரைந்து நகர்ந்து கொண்டும் அலைந்தது கொண்டிருப்பதும் விளங்கும். காற்றுக்கு உருவம் கிடையாது. அதே சமயத்தில் காற்று இன்றி உயிர் வாழ்வதும் முடியாத காரியம் இது நாம் நன்கறிந்த ஒன்று. மனித வாழ்வும் இப்படி இருக்கும் பொழுது துன்பம் என்பது கிடையாது. தான் என்கிற தன்மை வெளிப்படும் பொழுது நாம் நிலையனவரகிறோம். அப்படி நிலையாகும் போது அதை தக்க வைத்துக்கொள்ள முயல்கிறோம். விளைவு துன்பத்தை எதிர்நோக்க வேண்டியதாகிறது. நம்முடைய பணி காற்று எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம். ஆனால் அந்தப்பணி எங்கிருந்து வருகிறது என்று தேடும் போது காற்றைப்போல் கண்ணுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.தெரிந்தால் அதனால் நன்மையையும் வரும் தீமையும் வரும். பெரும் பகுதி நான்மையே வரும் . அதற்க்கு அடிபணிந்து விட்டால் விளைவு துன்பம். ஆக வாழுங்கள் ஆனந்தம்மாக வாழுங்கள்.காற்றைப்போல் கண்ணில் தெரியாமலே மற்றவர்கள் ஆனந்தமாக உயிர் வாழ..... வாழ்க வளமுடன்
தொடரும் ....