அறுவை சிகிச்சை முதிய மருத்துவர் - இணைக்குறள் ஆசிரியப்பா

(இணைக்குறள் ஆசிரியப்பா)

ஆயிரத்துத் தொள்ளா யிரத்து எழுபத்
தொன்றில் பிறந்த எனதுபெண் குழந்தை
நாலே மாதம்;
பாலே குடிக்காது;
தெரிந்தது பிறவியில் இதயநோய்,
அடைந்தது அழுதே குடலிறக்கம்;
அழஅழ மிகுந்தது தொல்லை; அதனால்
உடனே எடுத்துச் சென்றேன் குழந்தையை
அறுவை சிகிச்சை முதிய மருத்துவர்
டீ.துரை ராசனிடம்; சோதனை செய்தாரே! 1

ஆயிரத்துத் தொள்ளா யிரத்து எழுபத்
தொன்றில் பிறந்த எனதுபெண் குழந்தை
நாலே மாதம்;
பாலே குடிக்காது;
தெரிந்தது பிறவியில் இதயநோய்,
அடைந்தது அழுதே குடலிறக்கம்;
அறுவை சிகிச்சை முதிய மருத்துவர்
டீ.துரை ராசன் சோதனை செய்தாரே! 2

ஆயிரத்துத் தொள்ளா யிரத்து எழுபத்
தொன்றில் பிறந்த எனதுபெண் குழந்தை
நாலே மாதம்;
பாலே குடிக்காது;
அழஅழ மிகுந்தது தொல்லை; அழவே
குழந்தையை டாக்டரிடம் எடுத்துச் சென்றேன்
தெரிந்தது பிறவியில் இதயநோய்;
அடைந்தது அழுதே குடலிறக்கம்;
அறுவை சிகிச்சை முதிய மருத்துவர்
டீ.துரை ராசன் சிகிட்சை செய்தாரே! 3

ஆயிரத்துத் தொள்ளா யிரத்து எழுபத்
தொன்றில் பிறந்த எனதுபெண் குழந்தை
நாலே மாதம்;
பாலே குடிக்காது;
அழஅழ மிகுந்தது தொல்லை; அழவே
குழந்தையை டாக்டரிடம் எடுத்துச் சென்றேன்;
தெரிந்தது பிறவியில் இதயநோய்;
அடைந்தது அழுதே குடலிறக்கம்;
அறுவை சிகிட்சை மருத்துவர் செய்தாரே! 4

எனது அருமைப் பெண்குழந்தை அபிராமி,
நாலே மாதம்;
பாலே குடிக்காது;
தெரிந்தது பிறவியில் இதயநோய்;
அடைந்தது அழுதே குடலிறக்கம்;
மருத்துவர் அறுவை சிகிட்சை செய்தாரே! 5

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-May-14, 1:44 pm)
பார்வை : 184

மேலே