இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களில் கடலுள் கோட்பாடு

இந்து மற்றும் இஸ்லாம் மதங்களில் கடவுள் கோட்பாடு

இந்து மதத்தின் கடவுள் கொள்கையானது பல தெய்வ நம்பிக்கையுடையதாகும். இந்துக்களானவர்கள் பல தெய்வங்களின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என பெரும்பாலும் அறியப்படுகின்றனர். இதன் உட்பிரிவான மூன்று தேவ நம்பிக்கையும், மூப்பத்து மூன்று கோடி தேவர்களும் உண்டென நம்பிக்கை கொள்கின்றனர்.


இந்துக்களின் வேதப் புத்தங்கள் கடவுள் கொள்கை பற்றி எவ்வாறு கூறுகிறது என ஆராய்ந்து பார்ப்பது உண்மை நிலையை எடுத்துக் காட்டுவதற்கு ஓர் சிறந்த வழியாக இருக்கும் அல்லவா?

இந்து மக்களின் நம்பிக்கைகள் அனைத்தையும் ஒருங்கினைத்து கொண்டு செல்லும் வகையில் பல்வேறு கோட்பாடுகளைக் கொண்டிருக்கும் வேதங்கள், உபநிஷத்துக்கள், பகவத் கீதை போன்றன இந்து மதத்தின் அடிப்படைக் கிரந்தங்களாகும். மேலும் வேதங்கள் ரிக் வேதம், யஜீர் வேதம்,ஸாம வேதம், அதர்வன வேதம் என அறியப்படும்.

ஒவ்வொரு மதத்தைப் பின்பற்றுபவர்களும் தமது புனித வேதப் புத்தகங்களில்கூறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை சரியான முறையில் பின்பற்ற வேண்டும் உதாரணமாக ஓர் இந்து தனது இந்து வேதங்கள், உபநிஷத்துக்கள், பகவத் கீதை போன்றன எவற்றைக் கூறுகின்றதோ அவற்றுக்கு மதிப்பளித்து அக் கருத்துக்களையே பின்பற்ற வேண்டும் இது தர்க்க ரீதியான ஓர் சாதாரண விடயம்.



இந்து மதத்தின் கடவுள் கொள்கை.

இந்து மத வேதங்கள், உபநிஷத்துக்கள், பகவத் கீதை போன்றன கடவுக் கொள்கை தொடர்பில் மிகத்தெளிவான நிலைப்பாட்டில் உள்ளன. ஆயினும் இந்துக்கள் அவற்றைப் பின்பற்ற தவறிவிட்டார்கள் என்பதற்கு பல நூற்றுக் கணக்கான ஆதாரங்களைக் முன்வைக்க முடியும்.

இந்துக்கள் தமது மத புனித நூல்கள் கூறுபவற்றை பின்பற்றத்தவறியமைக்கு பிரதான காரணமாக இவர்கள் தமது வேதப்புத்தகங்களையும் அதிலுள்ள மந்திரங்களையும் வாசிப்பதில்லை மேலும் அவற்றை வாசிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பவற்றைக் கூறமுடியும்.

பிராமனர்கள் வேதங்களைப் படிக்கலாம், சத்திரியர்கள் அதனைக் கேட்கலாம், சூத்திரியர்கள் வேதங்களை படிக்கவோ அல்லது கேட்டவோ அனுமதிக்கப்படுவதில்லை.

இந்துக்களைப் பொருத்தவரையில் பிரம்மா பிராமனர்களை தனது தலையிலிருந்து படைத்தான். மேலும் அவர்கள் படித்தவர்கள். தனது மார்பிலிருந்து சத்திரியர்களை அதாவது வீரர்களைப் படைத்தார். தனது துடை அல்லது வயிற்றிலிருந்து வயினவர்களை அதாவது வியாபாரிகளை அவர் படைத்தார். தனது கால்களிலிருந்து சூத்திரர்களைப் படைத்தார்.


இந்து மதத்தில் இது போன்ற ஜாதிப் பிரிவினைகளை உண்டு. இதனை நாங்களை ஏறக்;கவில்லை மேலும் பல இந்து மத அறிஞ்ஞர்களும் இதனை ஏற்க்கவில்லை. இந்து மத தீர்திருத்தவாதியான ராஜா ராம் மோகன் ராய் போன்ற பலரை இதற்கு உதாரணமாக கூறலாம்.

நீங்கள் கடவுள் கொள்கை தொடர்பாக பரம்பரை பரம்பரையாக எவ்வாறு இருந்து வந்தீர்கள் உங்களின் முன்னோர்கள் எவற்றைக் கூறினார்கள் என்பவற்றை எல்லாம் ஒரு பக்கம் வைத்திவிட்டு உங்கள் வேதப் புத்தங்களை நீங்களும் கொஞ்ஞம் வாசித்துப் பாருங்கள்.

சந்தோகியா உபநிஷதம் அத்தியாயம்- 6 பகுதி- 2 வசனம் - 1
“கடவுள் ஒன்றே இரண்டாவது இல்லை”

ரிக்வேதம் புத்தகம் -10 வேதவரி 114 மந்திரம் -5
“இறைவன் ஒருவனே”

பகவத் கீதை அத்தியாயம்- 10 வசனம்- 3
“எல்லாம் வல்ல இறைவன் அனைத்து உலகங்களுக்கும் அதிபதி”


ஸ_வேதா ஷ்வேதர் உபநிஷம் அத்தியாயம்- 6 வசனம்- 9
“எல்லாம் வல்ல இறைவனுக்கு பெற்றோர் இல்லை அவனுக்கு அவனுக்கு தலைவன் இல்லை தாய் இல்லை தந்தையும் இல்லை”



ரிக்வேதம் புத்தகம்-2 வேதவரி-1
“எல்லாம் வல்ல இறைவனுக்கு 33 க்கும் குறைவில்லாத பெயர்கள் இறைவனுக்கு சூட்டப்பட்டுள்ளன”.


ரிக்வேதம் புத்தகம்-2 வேதவரி-1 மந்திரம்-3

இம் மந்திரம் கடவுளுக்கு “பிரம்மா” என பெயர் சூட்டுகிறது. “பிரம்மா” என்பதை தமிழில் மொழி பெயர்த்தால் படைப்பாளன். எனப் பொருள். மேலும் அதனை அரபியில் மொழிபெயர்த்தால் “காலிக்” எனப் பொருள்ப்படும். எல்லாம் வல்ல இறைவனை படைப்பாளன் என்றோ “காலிக்” என்றோ அழைப்பதில் முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால் படைப்பாளனான எல்லாம் வல்ல இறைவனுக்கு நான்கு தலைகள் உண்டு எனவும் ஒவ்வொரு தலையிலும் கிரீடங்கள் அணியப்பட்டிருக்கிறது எனக் கூறினால் இவ் விடயத்தை முஸ்லிம்ளாகிய எங்களால் நிச்சியமாக ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் இக்கருத்து ஸ_வேதா ஷ்வேதர் உபநிஷம்,
மற்றும் யஜூர் வேதம் என்பவற்றுக்கு முற்றிலும் எதிரானது.

ஸ_வேதா ஷ்வேதர் உபநிஷம் அத்தியாயம்- 4 வசனம்- 19
மற்றும் யஜூர் வேதம் அத்தியாயம் -32 வசனம் -3
“இறைவனுக்கு நிகராக எதுவுமில்லை அவனைப்போல் எதுவுமில்லை”




ரிக்வேதம் புத்தகம்-2 வேதவரி-1 மந்திரம்-3

மேலும் ரிக்வேதம் இறைவனை விஷ்னு எனவும் அழைக்கிறது இதன் தமிழ் கருத்து காப்பாற்றுபவன் அல்லது உணவு அளிப்பவன். விஷ்னு என்பதை அரபியில் மொழி பெயர்த்தால் “ரப்பு” என பொருள்ப்படும். எல்லாம் வல்ல இறைவனான அல்லாஹ்வை “ரப்பு” என அழைப்பதில் முஸ்லிம்களாகிய எங்களுக்கு பூரண உடன்பாடு.

ஆனால் காப்பாற்றக் கூடிய கடவுள் பாம்பின் படுக்கையில் அமர்ந்து கொண்டு கடலில் வலம் வருபவர் என்றும் வானத்தில் கருடப்பறவையின் மீது பறப்பவர் என்றும் கூறினால் இதனை முஸ்லிம்களாக எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் யஜூர் வேதத்திற்கு இக் கருத்து முரணானது.

யஜூர் வேதம் அத்தியாயம் -32 வசனம்- 3

“எல்லாம் வல்ல இறைவனுக்கு உருவம் ஏதுமில்லை”

மேலும் இறைவனைவை வணங்குவது பற்றி இந்து வேதப் புத்தகங்கள் பின்வருமாறு கூறுகிறது.

ரிக் வேதம் புத்தகம்-8 வேதவரி-1 மந்திரம் 1 மற்றும்
ரிக் வேதம் புத்தகம்-6 வேதவரி-45 மந்திரம் - 16 ஆகியன கூறுகிறது.

புகழ் அனைத்தும் இறைவனுக்கே அவனை மட்டும் வணங்குங்கள்.


இந்து மத பிரம்ம சூத்திரம் கூறுகிறது.

“இறைவன் ஒருவனே இரண்டாவது இல்லை, இரண்டாவது இல்லை,இருக்க முடியாது , இல்லவே இல்லை”

இந்து மத வேதங்கள் இவ்வளவு தெளிவாகவும்,ஆழமாகவும் கடவுள் கொள்ளையைப் பற்றி குறிப்பிடுகிறது. நீங்களும் இந்து மத வேதங்களைப் படித்தால் நிச்சியம் பல விடயங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

இஸ்லாம் வேதத்தில் கடவுள் கோட்பாடு

எந்த இரு முஸ்லிமும் தனது மதத்தின் கடவுள் கோட்ப்பாடு தொடர்பில் அல் குர்ஆனின் பின்வரும் வசனங்களை கொண்டு விளக்குவார்.

அத்தியாயம் 112
இஃலாஸ் - ஏகத்து;துவம்
ருகூஃ 1 மக்கீ வசனங்கள்: 4

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்;லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகின்றேன்).

1. (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் - அவன் ஒருவனே.
2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
3. அவன் (எவரையும்) பெறவுமில்லை.(எவராலும்)பெறப்படவும் இல்லை.
4. அன்றியும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

இதே விடயத்தைத்தான் இந்து மத வேதங்களும் கூறுகின்றன. இவற்றை ஒப்பீட்டு ரீதியில் ஆராய்ந்து பார்ப்பது மேலும் சிறப்பாக அமையும் அல்லவா?


1. (நபியே!) நீர் கூறுவீராக: அல்;லாஹ் - அவன் ஒருவனே.

சந்தோகியா உபநிஷதம் அத்தியாயம்- 6 பகுதி- 2 வசனம் - 1

“கடவுள் ஒன்றே இரண்டாவது இல்லை”

ரிக்வேதம் புத்தகம் -10 வேதவரி 114 மந்திரம் -5

“இறைவன் ஒருவனே”



2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

பகவத் கீதை அத்தியாயம்- 10 வசனம்- 3

“எல்லாம் வல்ல இறைவன் அனைத்து உலகங்களுக்கும் அதிபதி”



3. அவன் (எவரையும்) பெறவுமில்லை. (எவராலும்) பெறப்படவும் இல்லை.

ஸ_வேதா ஷ்வேதர் உபநிஷம் அத்தியாயம்- 6 வசனம்- 9

“எல்லாம் வல்ல இறைவனுக்கு பெற்றோர் இல்லை அவனுக்கு அவனுக்கு தலைவன் இல்லை தாய் இல்லை தந்தையும் ல்லை”



4. அன்றியும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை.


ஸ_வேதா ஷ்வேதர் உபநிஷம் அத்தியாயம்- 4 வசனம்- 19
மற்றும் யஜூர் வேதம் அத்தியாயம் -32 வசனம் -3

“இறைவனுக்கு நிகராக எதுவுமில்லை அவனைப்போல் எதுவுமில்லை”


5.திருக்குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

மு.வ : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

அன்பான இந்து சகோதரர்களே!

யாராவது மனிதர்களையோ அல்லது வேறு எவற்றையேனும் கடவுள் என கூறினால் மேலே அல் குர்ஆனின் இஃலாஸ் இல் குறிப்பிட்டப்பட்ட விடயங்களுக்கு அல்லது இந்து மத வேதங்களில் குறிப்பிட்டப்பட்ட விடயங்களுக்கு பொருந்துமாயின் அவர்களை கடவுள் என ஏற்றுக் கொள்வதில் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை.

நீங்கள் உண்மையான இந்துவாக இருந்தால் உங்களது வேதங்கள்,உபநிஷத்துக்கள்,பகவத் கீதை போன்றன எவற்றை கூறுகிறதோ அவற்றின் கொள்கைகளை பற்றிக் கொள்ளத்தானே வேண்டும்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை நீங்கள் ஏற்ககூடியவராக இருந்தால் இஸ்லாமே உங்கள் தேடலின் அடைவிடமாக இருக்கும்.

எழுதியவர் : லெத்தீப் (13-May-14, 3:33 pm)
பார்வை : 195

சிறந்த கட்டுரைகள்

மேலே