என்னென்று தெரியவில்லை
என் மனக் குளத்தில்
அநாமதேய சிந்தனைகள்
அகப்பட்டு
குழப்ப வளையங்களை
பரப்பிக் கொண்டிருக்கிறது
சிறியதில் தொடங்கி....
பெரியதாக
அனைத்தும் கிடைக்கப் பெற்றேன்
பணம், படிப்பு, பதவி ,பாசம்
ஆயினும் ஆழி சூழ்
வெறுமைஆட்கொண்ட
காரணம் புரியேன்....
நிரப்பப் படா வெற்றிடம்
நெஞ்சக் கூட்டிற்குள்
நேற்று ரசித்தவைகள்
இன்று வெறுப்புக்குரியதாய்!்
பறவைகளின் சத்தம்
பூச்சிகளின் ரீங்காரம்
மலரின் வாசம்
அனைத்தும் என்னை
கிளர்ச்சிப் படுத்தவில்லை
நேற்று வரை
என்னை ஆசுவாசப்படுத்திய
அபிலாஷைகளாய்
அவைகள் இருந்தும்
தங்கம் விலை சரிந்த
செய்தி பார்த்தும்
என் அங்கம் மகிழவில்லை
ஏன்? என் நேற்றைய மகிழ்ச்சி
நீட்சிப் பெற மறந்ததோ?
வாழ்க்கை அத்தியாயத்தின்
நீக்கமுடியா பக்கமோ
இந்த அர்த்தமற்ற வெறுமை....
நேற்றைய இன்று கிடைக்காவிடினும்
நேற்றைய நாளை கிடைக்கட்டுமே....!
வெறுமை வரட்டும்
அது கற்பனைக் கொடுக்கும்
கவிதைக்கு சிறகொன்று கிடைக்கும்
அர்த்தமற்ற வெறுமை
ஆட்க்கொண்டு
அழித்தொழிக்கிறது
நான் வரைய முலும்
என் கவிதை சிற்பங்களை......
என் செய்வேன்?