சிதறல்கள்
என் பிள்ளைக்கு சோறூட்ட
வீட்டுக் குளத்தில்
கொட்டிக் கிடக்குது
இரவு நிலா !
********
கிட்டே வந்து வந்து
எட்டிப் போகுது ஆலமரம்.
ஊஞ்சல் !
*********
பூங்காவெங்கும் அருவி
தலைகீழாய் பூத் தூவுது.
வண்ண நீரூற்று !
*********