விதியின் விளையாட்டு29

சந்துருவின் அப்பா அம்மா ரிஷாவினியின் அப்பாவிடம் பேசியதை ஷிவானியிடம் சொன்னாள் ரிஷானி....!

இவ்ளோ விஷயம் நடந்து விட்டதா? என்று நம்ப முடியாமல் கேட்டாள் ஷிவானி?????

ஆம் என்று தலையசைத்தவள்...நீயும் அத்தானும் சேர்ந்து அடுத்த தடவை நம் வீட்டுக்கு வரும் போது எனக்கும் மதனுக்குமான திருமண விஷயத்தை பேச வேண்டும் என்று கடுமையாக சொன்னாள் ரிஷானி....

சரிடி 41 ஆவது நாள் வரும் விருந்துக்கு சொல்லி விடுகிறோம் என்று அவளுக்கு நம்பிக்கையான வாக்களித்தால் ஷிவானி அவளின் பேச்சை ஏற்றுக்கொண்ட ரிஷானி சந்தோஷத்துடன் மதனுக்கு அழைப்பைக்கொடுத்தாள்.........


இங்குள்ள விருந்து நிகள்ச்சிகளையெல்லாம் முடித்து விட்டு ஷிவானியும் அவளுடைய கணவனும் அவர்கள் வீட்டிற்கு செல்ல தயாரானார்கள்.

ரிஷானியிடம் வெற்றி என்று சைகை மூலம் காட்டிவிட்டு அங்க்கிருந்து கிளம்பினார்கள் இருவரும்........!

சந்துருவின் பெற்றோர் ஊரில் முக்கியமாக ஒரு வேலை இருப்பதாகவும் வருவதற்கு 15நாட்கள் ஆகும் என்றும் சொல்லிவிட்டு வந்த பிறகு மற்ற விஷயங்களை பற்றி பேசிக்கலாம் என்று சொல்லி கிளம்பினர்......

அவர்கள் கிளம்பினதும் கொஞ்சம் நிம்மதியானாள் ரிஷானி ஆனால் ஒரே ஒரு வருத்தம் மதனுடனு பேசமுடியாது காரணம் அவன் 1வாரம் தன் தங்கையின் கல்லூரி விடுமுறையின் காரணமாக அவனுடைய பாட்டியின் ஊருக்கு செல்லவிருக்கிறான் அதனால் மனதிற்குள் கவலையுடன் காணப்பட்டாள் ரிஷானி.....!


ஷிவானி வருவதற்கு இன்னும் 3நாட்கள் தான் இருக்கின்றது மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டாள் ரிஷானி........

அடுத்தநாள் காலை ஷிவானியின் வீட்டிலிருந்து போன் வந்தது ஆசையாக எடுத்து பேசிய ஷிவானியின் அப்பா அங்கிருந்து வந்த தகவலை கேட்டது அதிர்ச்சியடைந்து அலறி துடித்து கீளே விழுந்தார்............???????

அவரது சத்தத்தை கேட்டு மனைவி வந்து என்னங்க ஏனென்று கேட்டாள்........

கீளே விழுந்தவர் எழும்பி
என்னவென்று விஷயத்தை சொல்லாமல் காரை எடுத்து விட்டு வேகமாக சென்று சிவகாமி மருத்துவமனையில் நிறுத்தினார்....!

என்னங்க என்ன விஷயம் சொல்லுங்க பயமாக இருக்குதுங்க என்று சொல்வதும் எதுவும் அவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை........

ஜோசியரின் பேச்சை கேட்காமல் போய் விட்டோம் அவரின் வாக்கு பலித்து விடுமோ என்ற எண்ண ஓட்டத்தில் இருந்தவர்...... அங்கு ஒரு பெட்டில் ஷிவானி மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் காட்ச்சியைக்கண்டு துடித்தார்.....???????



(மன்னிக்கவும் தோழர்/தோழிகளே வேலைப்பளு காரணமாக எனது தொடர்கதையை சரியாக தொடர முடியவில்லை)


தொடரும்....

எழுதியவர் : (17-May-14, 4:32 pm)
பார்வை : 311

மேலே